Close Menu
    What's Hot

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 
    தமிழ்நாடு

    காப்புரிமை சர்ச்சை!. இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த கருப்பு படக்குழு!. 

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    karuppu ilaiyaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவோடு வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் ‘கருப்பு’. நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒருபுறம் கொண்டாடப்பட்டாலும், மறுபுறம் அதில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட காட்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

    இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தை மறைமுகமாக நையாண்டி செய்யும் வகையில் அந்த காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்களும் இளையராஜாவின் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், “இளையராஜாவின் பாடலைப் பயன்படுத்தியதற்காக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்” என்ற தொனியில் வசனம் இடம்பெற்றிருந்தது.

    பல ஆண்டுகளாக தனது இசைக்கான காப்புரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஒரு ஜாம்பவானை, இப்படித் தரம் தாழ்த்திச் சித்தரிப்பது முறையல்ல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்.ஜே. பாலாஜிக்கும் படக்குழுவிற்கும் எதிராக கண்டன குரல்களை எழுப்பினர்.

    சர்ச்சை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் (Dream Warrior Pictures) உடனடியாக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    அந்த அறிக்கையில், “கருப்பு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சி என்பது வெறும் செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே இடம் பெற்ற தற்செயலான ஒன்று. இசைஞானி இளையராஜா ஐயாவை காயப்படுத்தவோ அல்லது களங்கப்படுத்தவோ படக்குழுவிற்கு எந்த எண்ணமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், “50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்து வரும் இசை அரசரான இளையராஜாவுக்கு எங்களிடம் மிகுந்த மரியாதை உள்ளது. உள்நோக்கம் இல்லாமல் வைக்கப்பட்ட அந்த காட்சியால் இளையராஜா அல்லது அவரது ரசிகர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக எங்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
    Next Article ஆதார் அட்டை புதுப்பிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    May 19, 2026

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?

    மோசடிப் பேர்வழியை கட்சியில் சேர்த்த செங்கோட்டையன்… கொதிக்கும் பொதுமக்கள்!

    நள்ளிரவில் வீடு புகுந்து செய்தியாளர் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்!. திருவாரூரில் பயங்கரம்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026

    கேஸ் நிரப்பும் பணியின்போது வெடித்து சிதறிய ஏசி!. ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.