Close Menu
    What's Hot

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? இன்று சிஎஸ்கே-வுக்கு மேஜிக் நடக்குமா?. GT-யுடன் மோதல்!
    விளையாட்டு

    பிளே-ஆஃப் கனவு நனவாகுமா? இன்று சிஎஸ்கே-வுக்கு மேஜிக் நடக்குமா?. GT-யுடன் மோதல்!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    GT VS CSK
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் 2026 தொடரின் 66-வது லீக் போட்டியில் இன்று (மே 21), ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு இந்த விறுவிறுப்பான ஆட்டம் தொடங்குகிறது.

    தொடர்ச்சியான சில தோல்விகளால் சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மிகவும் மங்கிப்போயுள்ள சூழலில், இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் நீடிக்கிறது. ரன் ரேட் அடிப்படையிலும் சரிவடைந்துள்ளதால், சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் இன்று குஜராத் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்துவதுடன், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளிலும் ஏதேனும் அற்புதம் நடக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது. எது எப்படியிருந்தாலும், இந்தத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியோடு முடித்து, கம்பீரமாக விடைபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் சிஎஸ்கே களம் காணும்.

    மறுபுறம், 16 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் தங்களது இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால் இறுதிப்போட்டிக்குச் செல்ல இரண்டு வாய்ப்புகள்  கிடைக்கும் என்பதால், குஜராத் அணி தனது முழு பலத்தையும் காட்டி விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

    அகமதாபாத் மாநகராட்சித் தேர்தல் காரணமாக, முன்னதாக ஏப்ரல் 26 அன்று நடக்கவிருந்த போட்டி சென்னைக்கும், இன்று சென்னையில் நடக்கவிருந்த போட்டி அகமதாபாத்திற்கும் மாற்றப்பட்டது. இதனால், சிஎஸ்கே-வுக்குச் சாதகமான சேப்பாக்கம் மைதானத்திற்குப் பதிலாக, குஜராத்தின் கோட்டையான அகமதாபாத்தில் இப்போட்டி நடப்பது சென்னை அணிக்குக் கூடுதல் சவாலாக அமையவுள்ளது.

    இதே தொடரில் ஏப்ரல் 26-ல் நடந்த முதலாவது மோதலில், சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் (87 ரன்கள்) சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் எளிதாக வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி தங்களது பலவீனங்களை உடைத்து, குஜராத்திற்குப் பதிலடி கொடுத்து வெற்றியோடு தொடரை நிறைவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூபாய் சரிவை கட்டுப்படுத்த களமிறங்கிய RBI!.  ‘டாலர்-ரூபாய்’ மாற்று ஏலம் அறிவிப்பு! 
    Next Article இந்தியாவின் நவீன சிற்பி ராஜீவ் காந்தி! – நினைவுநாளில் பதவியேற்கும் காங்கிரஸ் அமைச்சர்கள்
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    June 4, 2026

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    June 4, 2026

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!

    மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? – அரசுக்கு வைகோ வேண்டுகோள்

    பள்ளிகள் திறப்பு!. மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

    ’கருப்பு’ படத்தில் ஆர்யா நடித்திருந்தாரா? கேமியோ பகுதி நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்..!

    மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.