Close Menu
    What's Hot

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை சிறுமி கொலை: 7 நாட்களுக்குள் அறிக்கை கோரும் மகளிர் ஆணையம்
    Featured

    கோவை சிறுமி கொலை: 7 நாட்களுக்குள் அறிக்கை கோரும் மகளிர் ஆணையம்

    Editor web1By Editor web1May 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NCW
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

    கோயம்புத்தூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி காணாமல் போன நிலையில், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகள் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தானாக முன்வந்து (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டுள்ளது.

    தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹாட்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த வழக்கில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    vlcsnap 2026 05 23 14h51m41s769

    அத்துடன், பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பிரிவுகள், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாரா, காவல் விசாரணை நிலை, உடற்கூறு மற்றும் தடயவியல் ஆய்வு அறிக்கைகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் பற்றிய முழு விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.

    மேலும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் விளக்குமாறு கேட்டுள்ளது. இந்த விசாரணை மிகுந்த உணர்வுபூர்வத்துடனும் அவசரத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சிறுமிகள் மீது நடைபெறும் இத்தகைய கொடூர வன்முறைச் சம்பவங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை சிறுமி கொலை: கடுமையான தண்டனைக்கு விஜய் உறுதி!
    Next Article கோவை சிறுமி உடற்கூராய்வு முடிந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    July 16, 2026

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    தண்ணீர் பாட்டிலில் ‘சீக்ரெட் நோட்ஸ்’.. அர்ஜென்டினாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து கோல் கீப்பர்..!!

    PF வட்டி பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு!. சரிபார்ப்பது எப்படி?. முழு விவரம்!

    தர்மபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

    தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு விளம்பரம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.