Close Menu
    What's Hot

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மின்வாரியத்தில் ரூ.2,000 கோடி டெண்டர்கள் நிறுத்தி வைப்பு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
    Featured

    மின்வாரியத்தில் ரூ.2,000 கோடி டெண்டர்கள் நிறுத்தி வைப்பு: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

    Editor web1By Editor web1May 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில் அறிவிக்கப்பட்ட ரூ. 2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மின்சார வாரியப் பொறியாளர் கழகத்தின் 80வது ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு அண்ணா கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்து கொண்டார்.

    பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், முந்தைய திமுக ஆட்சியின் இறுதியில் மின்சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் தற்போதைய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை தற்போது ரூ. 2.5 லட்சம் கோடியாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த நிதி நெருக்கடியில் இருந்து வாரியத்தைச் சீரமைக்க வேண்டியது அவசியமானது என்றார். இல்லையெனில் வரும் ஆண்டுகளில் மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

    கடந்த காலங்களில் நிர்வாகச் சீர்கேடுகளும், டெண்டர் பணிகளில் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், இனிவரும் காலங்களில் சோலார் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் வெளிப்படையான முறையில், முறையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

    அனல் மின் நிலையங்களை மேம்படுத்தவும், மின்சாரத் துறையை லாபகரமானதாக மாற்றவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்சாரத் துறையில் நிலவும் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கான “மஞ்சள்” எச்சரிக்கை!
    Next Article ஒரே நாளில் 51,000 பேருக்கு அரசுப் பணி- பிரதமர் மோடி அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.