Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிதி நிலை மோசம் என மக்களை முதலமைச்சர் ஏமாற்ற முடியாது;  திமுக – அதிமுக இருவேறு துருவங்கள்; ஒன்று சேராது – பொள்ளாச்சி ஜெயராமன்!
    Featured

    நிதி நிலை மோசம் என மக்களை முதலமைச்சர் ஏமாற்ற முடியாது;  திமுக – அதிமுக இருவேறு துருவங்கள்; ஒன்று சேராது – பொள்ளாச்சி ஜெயராமன்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 pollachi jayaraman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொருளாதார நிலை தெரிந்திருந்தும் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் நிதிநிலைமை மோசம் என மக்களை தாஜா செய்ய முடியாது  என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்.

    கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மண்ணூர் கிராமத்தில் நடைபெற்றது.

    அதிமுக முன்னாள் துணை சபாநாயகரும் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமாக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    எதிர்வரும் காலங்களில் அதிமுக தொண்டர்கள் சோர்வடையாமல் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகிறது. ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்.

    தமிழகத்தின் பொருளாதார நிலை தெரிந்திருந்தும். 10 லட்சம் கோடி கடன் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தச் சூழலில் வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு 4500 உதவித்தொகை, 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக  வழங்கும் திட்டம், விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி போன்ற பல வாக்குறுதிகள் அளித்திருந்தார்.

    மக்கள் எதிர்பார்க்கின்றார்கள், எதையும் மறக்கவில்லை, பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது என தாஜா செய்ய முடியாது.

    திமுக கூட்டணியில்  நின்று பெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சிகளைச் சேர்த்துத் தான் விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார்.

    திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற விமர்சனம் எங்கள்மீது களங்கம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். ஒரு போதும் அண்ணா திமுகவும் திமுகவும் சேராது, சேரவும் முடியாது. வடதுருவம் தென் துருவம் ஒன்றாகுமா?

    வேண்டும என்றே கட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக் கதை இது.  அதிமுகவின் பாதை வேறு திமுகவின் பாதை வேறு என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

    AIADMK Chief Minister Financial Crisis pollachi jayaraman State Finance tamil nadu Tamil Nadu economy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓசூர்; 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சில்மிஷம்….  உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது
    Next Article நீட் மறுதேர்வு; விழுப்புரம் மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.