Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எடப்பாடியை முதல்வராக்க துள்ளிக் குதித்த உதயநிதி – திமுகவின் கைங்கர்யத்தை போட்டுடைத்த மாணிக்கம் தாகூர்
    Featured

    எடப்பாடியை முதல்வராக்க துள்ளிக் குதித்த உதயநிதி – திமுகவின் கைங்கர்யத்தை போட்டுடைத்த மாணிக்கம் தாகூர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 manikam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது என திமுக முடிவெடுத்ததாகவும் அதைக்கேட்டு உதயநிதி துள்ளிக் குதித்ததாகவும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பகீர் தெரிவித்துள்ளார்.

    008 manikam A

    சென்னையில் மே 23-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணிஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்திய அளவில் பாஜகவின் தொடர் வெற்றிக்கு காரணம் மோடியோ, அமித்ஷாவோ அல்ல காங்கிரஸ் தான் காரணம் எனக் கூறியிருந்தார். 20 ஆண்டுகளாக முதுகில் சுமந்த குறைந்தபட்ச நன்றி கூட இல்லாமல், பதவிக்காக சொல்லாமல் கொள்ளாமல் காங்கிரஸ் ஓடிப்போனதாகவும், இனி எந்தக் காலத்திலும் காங்கிரசை நம்பப் போவதில்லை எனவும் சாடினார்.  காங்கிரசுக்கு நாம் பாடம் கற்பிக்கிறோமோ இல்லையோ, மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள் எனவும் பேசியிருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். நாகரிகமாக பேச வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்க முற்பட்டதால்தான், காங்கிரஸ் உடனடியாகச் சென்று தவெகவுக்கு ஆதரவளித்ததாகக் கூறியுள்ளார்.

    சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் எம்.பி, மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது  முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக வந்து கொண்டிருந்ததால், திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாகவும்,

    பாஜக-வின் முக்கிய தலைவர் ஒருவர் திமுக மற்றும் அதிமுகவுக்கு கனெக்டிங் கால் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார். திமுக, அதிமுக கூட்டணி பேச்சு நடத்தியதை தற்போது சி.வி.சண்முகமும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

    அந்தப் பேச்சுவார்த்தையில் திமுக ஆதரவோடு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாகவும் இபிஎஸ் முதலமைச்சர் எனக் கூறியதும் உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்ததாகவும் தெரிவித்தார்.

    திமுக, அதிமுகவின் இந்த திடீர் கூட்டணி விவகாரத்தை தெரிந்து கொண்டுதான், தமிழக வெற்றிக் அக்ழகத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகவும்,

    திமுக- அதிமுக-வின் இந்தத் திட்டத்தை உடைத்தது காங்கிரஸ் என்பதால்தான், தங்கள் மீது திமுக காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளதாகவும் கூறினார்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு சாதகமாக முடிவு எடுப்பதற்காக தமிழ்நாடுஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பு இருந்ததாகவும்,  இதையெல்லாம் வெளியில் சொன்னால் அது தப்பாகி விடும் என்பதால் அமைதியாக இருந்ததாகவும்  தெரிவித்தார்.

    கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஆதரவு தர துடித்த உதயநிதி தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் அளந்து பேசியிருக்க வேண்டும் எனக் கூறிய மாணிக்கம் தாகூர் எம்.பி, எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கும் எனவும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானம்!. ஒரே நேரத்தில் 80,000 பேர் அமரும் வசதியில் ஏற்பாடு!
    Next Article திமுக , அதிமுக கூட்டணி – பொய் சொல்கிறார் மாணிக்கம் தாகூர் – ஆர்.எஸ்.பாரதி
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.