Close Menu
    What's Hot

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு”!. மதுரை சிறுவன் கொலைக்கு கனிமொழி கடும் கண்டனம்!
    Featured

    “யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு”!. மதுரை சிறுவன் கொலைக்கு கனிமொழி கடும் கண்டனம்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai murder kanimozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனத்தையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் அருகே நேற்று நள்ளிரவு குபேந்திரன் என்ற இளைஞரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குதூன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின் போது குபேந்திரன் என்ற இளைஞருக்கும் முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் முத்து மணிக்கு பலமாக அடிப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்து குபேந்திரனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது. இதனிடையே போலீசார் கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், திமுக எம்.பி.கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்றதொரு கொடூரமான செய்தியைக் கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

    தற்போதைய தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத ஒரு சூழ்நிலையே நிலவி வருகிறது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு இந்த அளவுக்குக் கடுமையாகச் சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு உண்மையில் அறிந்து வைத்துள்ளதா என்பதே பெரிய சந்தேகமாக உள்ளது” என அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழந்தைகள் பாதுகாப்பில் அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. தமிழிசை வலியுறுத்தல்..!!
    Next Article மக்களின் நிராகரிப்பால் விரக்தியில் காங்கிரஸ் தலைவர்கள்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    June 19, 2026

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    June 19, 2026

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    ஜூன் 29-ல் முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் மாநாடு!

    வால்பாறை குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை!. பொதுமக்கள் அச்சம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.