Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»BREAKING| கடுங்குற்றச்செயல்கள்!. துரிதமாக வழக்கு பதிவு செய்ய முதல்வர் விஜய் உத்தரவு!
    Featured

    BREAKING| கடுங்குற்றச்செயல்கள்!. துரிதமாக வழக்கு பதிவு செய்ய முதல்வர் விஜய் உத்தரவு!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay order
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து, முதலமைச்சர்  ஜோசப் விஜய் தலைமையில் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தில் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், கடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாகப் வழக்குப்பதிவு செய்து, அதனை விரைவாக விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

    வழக்குகளை முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தருவதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமையும்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும்.

    இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன்,அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மஹேஷ்வர் தயாள், காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹூசைன், காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ராஜேஸ்வரி,காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க்,காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) கே. பவானீஸ்வரி,மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு? முதல்வர் விஜய்யை சாடிய நயினார் நாகேந்திரன்..!!
    Next Article BREAKING| விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை வழக்கு: தர்ம முனீஸ்வரன் தான் குற்றவாளி..!! பரபரப்பு தீர்ப்பு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.