Close Menu
    What's Hot

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாலியல் வன்கொடுமைக்கு இரையாகும் சிறுமிகள் –  அரசுக்கு திருமாவளவன் கேள்வி
    அரசியல்

    பாலியல் வன்கொடுமைக்கு இரையாகும் சிறுமிகள் –  அரசுக்கு திருமாவளவன் கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை சிறுமியைஅடுத்து மரக்காணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிர படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்ததாகவும்  அவரது பெற்றோரைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    கோவை சூலூர் அருகே பள்ளப்பாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மே 21 ஆம் தேதி இரவு காணாமல் போனார். பின்னர் கண்ணம்பாளையம் குளத்துக்கு அருகே தென்னந்தோப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவ்விரு குற்றவாளிகளையும் பிணையில் வெளிவிடாமல்,  வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு கடும் தண்டனை வாங்கிட ஆவன செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    அடுத்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கிறார் என்கிற செய்தி மேலும் நம்மை உலுக்கியெடுக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள திருமாவளவன்,

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக காவல்துறையில் ‘சிங்கப்பெண்’சிறப்பு படை  உள்ளிட்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில்,  தமிழ்நாடு அரசு, இதுபோன்ற கொடுங்குற்றங்கள் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பாதிக்கபட்ட இவ்விரு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING| அதிமுகவில் பெரும் உடைவு..!! மூன்று எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா..!!
    Next Article திமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்கள் மின்துறையில் விதிமீறல் –  அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    June 2, 2026

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுக்கு ஷாக்..!! உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக MLA-க்கள் ராஜினாமா..??

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.