Close Menu
    What's Hot

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திரைப்படங்களுக்கு  புதிய சலுகை ; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி
    Featured

    திரைப்படங்களுக்கு  புதிய சலுகை ; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 cinema vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 16ஆம் தேதி, தமிழ் திரைப்படத் துறையினர் முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

    ​1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் ‘C’ படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.

    மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதற்கு அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாகப் பெறத் தேவையில்லை எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த உத்தரவு சினிமாத் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்தவர் என்பதால் சினிமாத்துறையினரின் கஷ்ட நஷ்டங்களை அறிந்த முதலமைச்சர், தங்களுக்கு இதுபோல் இன்னும் நல்லவைகளைத் தொடர்வார் என்று கோலிவுட் வட்டாரம் நம்பிக்கை தெரிவிக்கிறது. 

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் மேம்படுத்தப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்
    Next Article பயிர்க்கடன் தள்ளுபடி – தேர்தல் வாக்குறுதியை மீறிய முதலமைச்சர் விஜய் – விவசாயிகள் அதிருப்தி
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    July 22, 2026

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    July 22, 2026

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    டெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?

    டெல்லி போராட்டத்துக்கு தவெக ஆதரவு; ராகுல் கைதுக்கு விஜய் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.