Close Menu
    What's Hot

    திருப்பூரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பரபரப்பு… உருவபொம்மை எரிப்பு; மாணவர்கள் கைது!

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  
    Featured

    சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 Ac bus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் 78.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது

    சென்னையில் நாள் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்து சேவையைப் பயன்படுத்தி வரும் நிலையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நாள் தோறும் 3 ஆயிரத்து 600 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஏ.சி. வசதி கொண்ட பஸ் நிறுத்தங்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்தது. அந்த வகையில், சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய 4 இடங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஏ.சி.வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் ரூ.78.40 லட்சம் மதிப்பீட்டில் இந்த பஸ் நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் இணையதளம் வாயிலாக டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

     

    இந்த பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள், செல்போன் சார்ஜிங் பாயிண்ட், கழிப்பறை, டிஜிட்டல் தகவல் பலகைகள், குடிநீர், கண்காணிப்பு கேமரா, வை-பை போன்ற வசதிகள் இடம்பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, இப்பகுதியில் உள்ள அண்ணா சதுக்கம் பஸ் நிலையமானது நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பஸ்களை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    AC Bus Shelter Anna Square Chennai corporation Chennai News Urban Infrastructure
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 
    Next Article பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பரபரப்பு… உருவபொம்மை எரிப்பு; மாணவர்கள் கைது!

    July 22, 2026

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    July 22, 2026

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பரபரப்பு… உருவபொம்மை எரிப்பு; மாணவர்கள் கைது!

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.