Close Menu
    What's Hot

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 
    Featured

    எங்க நாட்டுக்கு சிக்னலே தேவயில்ல..! இந்தியாவுக்கு பக்கத்தில் இப்படி ஒரு நாடா? 

    Editor web4By Editor web4July 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் வீதிக்கு ஒரு சிக்னல் இருந்தாலும் கூட விபத்துகளை தவிர்க்க முடிந்த பாடில்லை. 7 கண்டங்களை கொண்ட பூமியில், மொத்தம் 195 நாடுகள் உள்ளன. உலக மக்கள் தொகையான 830 கோடியில் அதிகபட்சமாக இந்தியாவில் 147 கோடி பேர் வசிக்கின்றனர். 141 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இங்கு மொத்தம் 40 கோடி வாகனங்கள் இருக்கின்றன. தினந்தோறும் விபத்துகளும், சாலை விதி மீறல்களும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட போதிய சாலை வசதிகள் இல்லாததும் ஒரு காரணமே. அப்படியிருக்க, இந்தியாவின் பக்கத்து நாட்டில் சிக்னலே இல்லை என்றால் நம்ப முடிகிறதா?

    இந்தியாவிற்கு மிக நெருக்கத்தில் உள்ளது பூட்டான். உலகிலேயே மிகச்சிறிய நாடுகளில் இதுவும் ஒன்று. இந்தியாவிற்கு மேல் நேபாளத்திற்கு அருகே அமைந்துள்ள இந்திய நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 லட்சம் தான். தலைநகர் திம்புவில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர்தான் வசிக்கின்றனர். பூட்டானில் உள்ள எந்த சாலையிலும் போக்குவரத்து சிக்னல்கள் என்பதே இல்லை. அதே நேரத்தில், வாகனங்களும் தங்குதடையில்லாமல் எளிதாக சாலைகளில் பயணிக்கின்றன.

    அதன் தலைநகர் திம்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கைகளால் காட்டும் சைகைகள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். தலைநகர் திம்புவில் 1990-ம் ஆண்டு போக்குவரத்து சிக்னல்களை அமைத்தபோதும் அதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த காரணத்தால், அவை நீக்கப்பட்டு மீண்டும் கைமுறை சைகைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.

    பூட்டானில் ஒவ்வொரு சாலைகளும், சாலை சந்திப்புக்களை கொண்ட வட்டச் சாலைகளும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கையாகவே மலைப்பாங்கான நாடு என்பதால், வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன. மேலும், வாகன ஓட்டிகளும் அவசரம் காட்டாமல், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனர்.

    பாதசாரிகள் கடக்கும் இடங்களில், மெதுவாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தேவையில்லாமல் ஹாரன் ஒலிக்கப்படுவதும் இல்லை.

    இப்படி, போக்குவரத்து ஒழுங்காக நடைபெறும்போது, பூட்டானில் எதற்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் தேவை? என்ற கேள்வி எழுகிறது. எனவேதான், பூட்டானில் சிக்னலும் இல்லை, அதனால் சிக்கலும் இல்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியில் வெடிக்கும் மெரினா புரட்சி!. மாணவர்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா?
    Next Article சென்னை; அண்ணா சதுக்கத்தில் ரூ.78 லட்சத்தில் ஏ.சி வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் – மாநகராட்சி டெண்டர் வெளியீடு  
    Editor web4

    Related Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    July 22, 2026

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    பிரதமர் மோடி இதுவரை சந்திக்காத பிரம்மாண்ட போராட்டம்: டெல்லியை உலுக்கும் ‘நீட்’ புரட்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.