Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»9 மாதத்தில் விபரீதமான காதல் திருமணம்..! இளம் பெண் இறந்ததால் பரபரப்பு..!
    தமிழ்நாடு

    9 மாதத்தில் விபரீதமான காதல் திருமணம்..! இளம் பெண் இறந்ததால் பரபரப்பு..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் 9 மாதத்தில் இறந்துபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சுருட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (62). இவருக்கு 3மகள்களும், 1மகனும் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அம்ருதா பிரியதர்ஷினி (27). பி.எஸ்.சி பட்டதாரியான இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி வேலைக்காக படித்து வந்துள்ளார்.

    அப்போது தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்த மகேஷ்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி உள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 9மாதங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்குப் பின் அம்ருதா பிரியதர்ஷினி, தொட்டியம் மேலத்தெருவில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (25.5.2026) அம்ருதாவின் தந்தை கேசவன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய மனைவி பதற்றத்துடன் தொலைபேசியில் அழைத்து, மகள் அம்ருதா பிரியதர்ஷினி பேச்சு மூச்சில்லாமல் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.

    இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அம்ருதா பிரியதர்ஷினி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
    காதலித்து திருமணம் செய்த 9 மாதங்களிலேயே மகள் இறந்துள்ளதால் மகளின் இறப்பு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தந்தை கேசவன், தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்தப் புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 9 மாதங்களிலேயே அமிருதா பிரியதர்ஷினி இறந்து போனதால் வரதட்சனை கொடுமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிதிகளை மீறி ராஜினாமா ஏற்பு; சபாநாயகர் நடவடிக்கை முரணானது!. அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
    Next Article முதல்வர் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம்!. பிரதமர் மோடி, காங். தலைவர்களை சந்திக்கிறார்!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.