Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விதிகளை மீறி ராஜினாமா ஏற்பு; சபாநாயகர் நடவடிக்கை முரணானது!. அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு
    Featured

    விதிகளை மீறி ராஜினாமா ஏற்பு; சபாநாயகர் நடவடிக்கை முரணானது!. அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு

    Editor web3By Editor web3May 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    agri krishnamurthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா குறித்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன் மற்றும் கட்சியின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “கடந்த 13-ஆம் தேதி தமிழக பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அரசின் மீது எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்திருந்தார். அந்தக் கடிதம் சபாநாயகரின் ஆய்வில் இருப்பதாக அவரே கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தங்களுக்கு எதிராக கட்சித் தாவல் சட்டம் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் மீதான தகுதி நீக்க மனு சபாநாயகரின் பரிசீலனையில் இருக்கும் போதே, அவசர அவசரமாக இந்த ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டது விதிகளுக்கும், சட்டத்திற்கும் முற்றிலும் முரணானது. இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என நாங்கள் மனு அளித்துள்ளோம்” என்றார்.

    ஆளுங்கட்சியைத் தாக்கிப் பேசிய அவர், “சட்டமன்றத்தில் பேசும்போது இந்த அரசு ‘குதிரை வேகத்தில்’ செயல்படும் என்று முதலமைச்சர் கூறினார். ஆனால், இவர்கள் குதிரை பேரத்தைத்தான் குதிரை வேகத்தில் நடத்துகிறார்கள் என்பது பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. காலையில் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கிறார்கள்; அடுத்த ஐந்து நிமிடத்தில் மேல்தளத்தில் உள்ள அமைச்சர்களின் அறையில் அவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

    இதைப் பார்க்கும்போது இது தமிழக அரசின் தலைமைச் செயலகமா அல்லது தமிழக வெற்றி கழகத்தின்  கட்சி அலுவலகமா என்ற சந்தேகம் எழுகிறது. தூய்மையான ஆட்சி தருவதாகக் கூறிவிட்டு, முறைதவறி, பின்வாசல் வழியாக ஆட்சியைத் தக்கவைக்க குதிரை பேரத்தில் ஈடுபடுவதே இந்த அரசின் சாதனை. அதேநேரம், தாங்கள் செய்த தவறை உணர்ந்து 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்புக் கோரி, அவரது தலைமையை ஏற்பதாக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய கட்சியின் முக்கிய வழக்கறிஞரான இன்பதுரை, “கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, சபாநாயகர் எவ்வாறு ஒரு உறுப்பினரின் ராஜினாமாவை அவசரமாக ஏற்றுக்கொள்ள முடியும்? பேரவையின் அதிகாரப்பூர்வ அரசாணை  வெளியான பிறகுதான் ஒரு ராஜினாமா சட்டப்படி செல்லும். ஆனால், அதற்கு முன்பாகவே அவர்கள் மாற்றுக்கட்சியில் இணைந்துவிட்டனர். எனவே, இந்த ராஜினாமாவை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும்.

    சபாநாயகரின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்; அது பொய். எந்த ஒரு அரசாணையை வெளியிட்டாலும், தவறு இருக்கும் பட்சத்தில் அதைத் திரும்பப் பெறும் அதிகாரம் சட்டத்திற்கு உண்டு” என்று சட்ட விளக்கமளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடான் 3 பட விவகாரம்!. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் புதிய படங்களில் நடிக்க தடை!!.
    Next Article 9 மாதத்தில் விபரீதமான காதல் திருமணம்..! இளம் பெண் இறந்ததால் பரபரப்பு..!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.