Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»மாவட்டம்»கார் மீது மோதிய வேன் – சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் காயம்
    மாவட்டம்

    கார் மீது மோதிய வேன் – சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு; 10க்கும் மேற்பட்டோர் காயம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    023 accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன், கார் மீது மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மாந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சாரா தனியார் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி முடிந்ததும் நிறுவன வேனில் ஏற்றி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பனப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், ஒச்சேரி அடுத்த சித்தாஞ்சி – சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச்சுவரில் மோதி, எதிர்திசையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதி பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    023 accident B

    இந்த விபத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஆம்பூர் நோக்கி சென்ற காரில் பயணம் செய்த 3 வயது சிறுமி 80 வயது முதியவர், கார் ஓட்டுநர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஷூ கம்பெனி ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    023 accident A

    தகவலறிந்த வந்த காவேரிப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை பார்வையிட்டதோடு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    023 accident d

    தொடர்ந்து ராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் தாஹிரா, கபீல் ஆகியோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களிடம் நலம் விசாரித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய நடவடிக்கைகள்: போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு!
    Next Article கிருஷ்ணகிரி அணையில் 1000 கனஅடி நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.