CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, சிபிஎஸ் இ போர்டுக்கு பல்வேறு வினாக்களைத் தொடுத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ராகுல்காந்த் பதிவிட்டுள்ளதாவது;-
CBSE தேர்வு முடிவுகளில் கடுமையான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கு வழக்கம் போல் மோடி அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை, பொறுப்பும் இல்லை, வெட்கமும் இல்லை.
இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட COEMPT நிறுவனம், 2019-ல் தெலங்கானாவில் Globarena என்ற பெயரில் இருந்தபோதே இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தது. பெயர் மாறியது. ஆனால் நோக்கமும் இயல்பும் மாறவில்லை.
இந்த பின்னணி வரலாறு அனைவருக்கும் தெரிந்திருந்தும், அதே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது.
18.5 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் இப்படிப்பட்ட நிறுவனத்தின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் யாருக்கும் அதைப் பற்றி கவலையில்லை. இது தவறு மட்டும் அல்ல – இது ஒரு திட்டமிட்ட சதி.
COEMPT நிறுவனத்திற்கு CBSE ஒப்பந்தம் ஏன், யாருடைய உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது?
எந்த விதிமுறைகள் மற்றும் செயல்முறைகள் புறக்கணிக்கப்பட்டு இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது?
COEMPT முன்பு Globarena என்ற பெயரில் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது என்பது CBSE-க்கு ஏன் தெரியவில்லை?
பின்னணி ஆய்வுகள் (background checks) ஏன் செய்யப்படவில்லை?
COEMPT நிர்வாகத்திற்கும் மோடி அரசுக்கும் இடையில் உண்மையில் என்ன தொடர்பு உள்ளது?
இந்த முழு ஊழலில் உள்ள உண்மையான குற்றவாளிகளை வெளிக்கொணர உடனடியாக சுயாதீன நீதித்துறை விசாரணையும் SIT அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.
CBSE-யின் Gen Z மாணவர்களே – உங்கள் உழைப்பையும் உங்கள் எதிர்காலத்தையும் யாரும் திருட முடியாது. இந்த சதியின் அடி வேர் வரை நாம் செல்வோம்; இந்த ஊழலை அடியோடு வேரறுப்போம்.
