Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மேட்டூர் நீர் திறப்புக்கு முன்பே தூர்வாருங்கள் – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி யோசனை
    Featured

    மேட்டூர் நீர் திறப்புக்கு முன்பே தூர்வாருங்கள் – அரசுக்கு எடப்பாடி பழனிசாமி யோசனை

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    எடப்பாடி K. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் முன்பே, அதாவது ஜூன் மாதம் 12-ஆம் தேதிக்கு முன்பே டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள பாசன வாய்க்கால்கள், ஆறுகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் தூர் வாரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் தங்கு தடையில்லாமல் சென்றது. மேலும், மழைக் காலங்களில் நீர் நிலைகளில் தடுப்பின்றி வெள்ள நீர் வேகமாக வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    குறிப்பாக, 2011-ஆம் ஆண்டு காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ‘நெய்வேலி காட்டாமணக்கு’ என்ற செடி நீர் நிலைகள் முழுவதும் ஆக்கிரமித்து பாசனத்திற்கு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து முழுமையாக அகற்றி, இன்றுவரை நெய்வேலி காட்டாமணக்கு என்ற செடி டெல்டா மாவட்டங்களில் எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கியது அம்மாவின் அரசு.

    டெல்டா மாவட்டங்களில் எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சிக் காலத்தில் தூர் வாரும் பணியையும், ஆறுகளின் கட்டமைப்புப் பணிகளையும், அந்தந்த பகுதிகளில், உள்ள பதிவு பெற்ற விவசாய சங்கங்களுக்கே வழங்கி, விவசாயிகளே தூர் வாரும் பணியை மேற்கொண்டதால், இப்பணி 100 சதவீதம் முறையாக நடைபெற்றது.

    இவ்வாறு, அம்மாவின் அரசு, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் முறையாக தூர் வாரும் பணியை காலத்தே மேற்கொண்டதால், ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை சென்றதால், விவசாயிகளுக்கு எவ்வித சேதமுமின்றி விளைச்சல் பெருகி, அம்மா ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதினை 6 முறை பெற்றோம்.

    கடந்த ஆட்சிக் காலத்தில் டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரப்படவில்லை என்று சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும், நானும், எங்களது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் பலமுறை பேசியும் எந்தப் பயனும் இல்லை.

    இந்த ஆண்டும் (2026) தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, டெல்டா மாவட்டங்களில் ‘சி’ மற்றும் ‘டி’ வாய்க்கால்கள் அவசர கோலத்தில் தூர் வாரப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததால் மழை வெள்ள நீர் வடியாமல் விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். மேலும், கொள்ளிடம் ஆறு, கோரையாறு, வெண்ணாறு போன்ற ஆறுகளில் இருந்து கிளை ஆறுகள் பிரியும் தலைப்புகளில் ஆகாயத் தாமரையை தடுத்து நிறுத்தும் வகையில் தடுப்புகளை அமைத்து நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்.

    எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு, டெல்டா மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளிலும் தேங்கிக் கிடக்கும் ஆகாயத் தாமரையை அகற்றி, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிவரை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்திட வலியுறுத்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதனி விமானத்தில்.. குடும்பத்துடன் டூர் சென்றார் மு.க.ஸ்டாலின்..!! எங்க தெரியுமா..??
    Next Article தேர்தலில் திமுக தோல்விக்கான காரணம் என்ன..?? கள ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.