Close Menu
    What's Hot

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»40 ஆண்டுகளை நிறைவு செய்த உலகநாயகனின் ‘விக்ரம்’!. ‘தலைமுறை கடந்த மரபு’!. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நெகிழ்ச்சி!
    சினிமா

    40 ஆண்டுகளை நிறைவு செய்த உலகநாயகனின் ‘விக்ரம்’!. ‘தலைமுறை கடந்த மரபு’!. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நெகிழ்ச்சி!

    Editor web3By Editor web3May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    40years of Vikram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ திரைப்படங்கள் மைல்கல்லாக அமைந்திருந்தாலும், 1986-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு என்று தனித்துவமான இடம் உண்டு. உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த இத்திரைப்படம் வெளியாகி தற்போது 40 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

    இவ்விழாவை முன்னிட்டு, கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் சிறப்புப் பகிர்வு ஒன்றைப் பகிர்ந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் 40-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் #40yearsofVikram மற்றும் #Vikram40 ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைநோக்கு பார்வையால் செதுக்கப்பட்ட ஒரு பாரம்பரியம், தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படுகிறது”

    தமிழ் சினிமாவின் முதல் அதிநவீன ஸ்பை த்ரில்லர் படமாகக் கருதப்படும் ‘விக்ரம்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மேலும், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார். இந்த 40 ஆண்டுக்கால கொண்டாட்டப் பதிவில் உலகநாயகன் கமல்ஹாசன், இளையராஜா, வைரமுத்து ஆகியோருடன் டர்மெரிக் மீடியா மகிழ்மன்றம் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் ஐயம்பாபு, சதிஷ் உள்ளிட்ட பலரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளக் கணக்குகளும் டேக்  செய்யப்பட்டுள்ளன.

    1986-இல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், கணினி மூலம் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. அதுமட்டுமன்றி, பல தசாப்தங்களுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2022-இல் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்திற்கும் இந்த பழைய விக்ரம் தான் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    40 ஆண்டுகளைக் கடந்தும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் இந்த மைல்கல் கொண்டாட்டத்தை உலகநாயகனின் ரசிகர்களும், சினிமா பிரியர்களும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்: விவசாயம், குடிநீர் பாதிப்பு அபாயம்..!!
    Next Article மேகதாது அணையை கட்ட முதலமைச்சர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்!. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    May 30, 2026

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    May 30, 2026

    குஷ்பு வீட்டில் டும்டும்டும் – பிரதமருக்கு நேரில் அழைப்பு

    May 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.