Close Menu
    What's Hot

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொடைக்கானல் கோடை விழா: பல வகை நாய்களின் கண்கவர் அணிவகுப்பு!
    தமிழ்நாடு

    கொடைக்கானல் கோடை விழா: பல வகை நாய்களின் கண்கவர் அணிவகுப்பு!

    Editor web1By Editor web1May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dog
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொடைக்கானலில் நடைபெற்ற 25வது நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியுடன் கூடிய கோடை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணைந்து நடத்திய 25-வது நாய்கள் கண்காட்சி நேற்று பூங்கா வளாகத்தில் மிக உற்சாகமாக நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சைபீரியன் ஹஸ்க்கி, கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன், அமெரிக்கன் புல்லி, மினியேச்சர், பாக்சர், சிட்சூ, லசாப்சோ, கான் கார்ஸோ, ஜெர்மன் ஷெப்பர்ட் மற்றும் நம்முடைய பாரம்பரிய ராஜபாளையம் வகை நாய்கள் என மொத்தம் 15 ரகங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

    Dog 2

    Dog 3

    நாய்களின் குணாதிசயங்கள், உரிமையாளரின் கட்டளைக்குக் கீழ்ப்படிதல், ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 5 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாய் ரகமும் தத்தமது தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்த, பூங்காவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    போட்டியின் உச்சகட்டமாக, 5 வயதான ‘டாபர்மேன்’ இனத்தைச் சேர்ந்த ‘பாகுபலி பாபு’ என்ற நாய் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. வளையத்திற்குள் குதிப்பது, உயரம் தாண்டுவது உள்ளிட்ட வீரதீர செயல்களைச் செய்து அசத்திய அந்த நாய், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    Dog 1

    பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். மே 31-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த கோடை விழாவில், நாய்கள் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வாக அமைந்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுறிஞ்சி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக விழா கோலாகலம்: கண்கவர் மலர் அலங்காரம்!
    Next Article 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    May 30, 2026

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.