Close Menu
    What's Hot

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக விழா கோலாகலம்: கண்கவர் மலர் அலங்காரம்!
    தமிழ்நாடு

    குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக விழா கோலாகலம்: கண்கவர் மலர் அலங்காரம்!

    Editor web1By Editor web1May 29, 2026Updated:May 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொடைக்கானலின் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயிலில், வைகாசி விசாகத் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

    பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் மலர் கண்காட்சியைத் தொடர்ந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு மலர் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு, குறிஞ்சி ஆண்டவர் முருகப் பெருமானுக்குப் பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்களைக் கொண்டு கண்கவர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கோயிலின் கருவறை முதல் வளாகம் வரை மலர்களால் பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு, ஆலயம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முருகப் பெருமான் தங்கக் கவசத்தில் ஜொலிக்க, சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

    4 14

    விழாவையொட்டி கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலில், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே கோயிலில் திரண்டனர். தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளித்த முருகப் பெருமானை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் ஒரு பகுதியாக, தியாவின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முருகப் பெருமானின் வரலாறு மற்றும் பக்திப் பாடல்களை அவர் இனிமையாகப் பாட, அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் மெய்சிலிர்த்து ரசித்தனர். மலர்களின் நறுமணம் சூழ, பக்திப் பாடல்கள் ஒலிக்க, கொடைக்கானல் மலைப் பகுதியில் வைகாசி விசாக விழா ஆன்மீகப் பரவசத்துடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்விற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோட்டில் ₹1 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்: இளைஞர் கைது!
    Next Article கொடைக்கானல் கோடை விழா: பல வகை நாய்களின் கண்கவர் அணிவகுப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.