Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!
    Featured

    வானில் இன்று (மே 30) நிகழும் அபூர்வம்: 27 ஆண்டுகளுக்குப் பின் தென்படும் ‘புளூ மைக்ரோ மூன்’!

    Editor web1By Editor web1May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அரிய வான்வெளி நிகழ்வான ‘புளூ மைக்ரோ மூன்’ (Blue Micro Moon) இன்று (மே 30) இரவு நிகழ உள்ளது. சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த அதிசயத்தைக் காணப் பொதுமக்களும், வானியல் ஆர்வலர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.

    ஒரு ஆங்கில மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வந்தால், அதில் இரண்டாவதாக வரும் பௌர்ணமி ‘புளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மே மாதத்தில் மே 1-ம் தேதி முதல் பௌர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பௌர்ணமி வருகிறது.

    2 18

    சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது, அது பூமியில் இருந்து மிக நீண்ட தொலைவில் (சுமார் 4,06,135 கி.மீ) இருக்கும் போது, சாதாரண நாட்களை விட நிலவு அளவில் சிறியதாகவும் மங்கலாகவும் தோன்றும். இதனையே ‘மைக்ரோ மூன்’ என்கிறோம். புளூ மூன் நிகழ்வு பொதுவாக 2 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஆனால், இது ‘மைக்ரோ மூன்’ உடன் இணைந்து நிகழும் அபூர்வ நிகழ்வு, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரங்கேறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வை இந்தியா முழுவதும் இன்று மாலை அல்லது இரவு வானில் தெளிவாகக் காணலாம். வானம் மேகமூட்டம் இன்றித் தெளிவாக இருந்தால், எவ்வித தொலைநோக்கியும் இன்றி வெறும் கண்களாலேயே இந்த அதிசயத்தைக் கண்டு ரசிக்க முடியும். நிலவு உதிக்கும் நேரத்தில் சற்று பெரியதாகவும், பொன்னிறம் அல்லது ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளிக்க வாய்ப்புள்ளது. பின்னர் வானில் உயர உயர அது வழக்கமான வெள்ளை நிறத்திற்கு மாறும்.

    இந்த அரிய நிகழ்வு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக அமையும் என்பதால், இன்று (மே 30) இரவு வானத்தை உற்று நோக்குமாறு வானியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்
    Next Article கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!
    Editor web1
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.