சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நிர்வாகத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று (மே 29) 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தனர். இந்தநிலையில், இன்று (மே 30) சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிர்லோஸ்குமார்: தமிழக கவர்னரின் செயலாளராக இருந்த இவர், வீட்டு வசதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சிவகுரு பிரபாகரன்: கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த இவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா, சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி, அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருணாளினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கவுரவ் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங், கோவை மாநகராட்சி ஆணையராக கட்டா ரவி தேஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
