Close Menu
    What's Hot

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?
    Featured

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 kovil A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, முறைகேடாக நடந்து வரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முருகனின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர்.
    முருகனுக்கு உகந்த நாட்கள், விழாக்கள், பண்டிகைகளின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து மொட்டை அடிப்பது உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்துவிட்டு சுவாமியை கண்ணாரக் கண்டு மனதார வேண்டிச் செல்வதுண்டு.
    அப்படி முருகனை வணங்க வரும் பக்தர்கள், பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோருக்கான தரிசனம் என, மூன்று வரிசைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால்,, அங்குள்ள அதிகாரிகள், அர்ச்சகர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பக்தர்களிடம் கையூட்டு பெற்று அவர்களை குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அனுப்புவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

    தற்போதை ஆட்சி மாற்றத்திற்கு பின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான ரமேஷ், மே 29-ஆம் தேதி மாஸ்க் அணிந்தபடி திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது உதவியாளரிடமே தரிசனத்திற்காக ஜிபே மூலம் 4ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிய அர்ச்சகர் மற்றும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அர்ச்சகர் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டதோடு, காவலர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர். மேலும் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

    அமைச்சரின் இந்த நடவடிக்கையை, விதிமுறையை மீறி செயல்பட்டதாகக் கூறி, தி.மு.க., முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கண்டித்ததோடு சாதிரீதியாகத் தொடர்புபடுத்தி குற்றமும்சாட்டியிருந்தார்.

    003 kovil

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ், ‘மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் ஜாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோவிலில், இன்னும் பல முறைகேடுகள் நடந்து வருவதை விரைவில் வெளியே கொண்டு வருவேன்’ என, தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில்தான், அமைச்சர் ரமேஷ் விரைவில் திருச்செந்தூர் கோயிலில் அதிரடி களையெடுப்பை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    அதாவது கோயிலில் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அழைத்து செல்வதில் கிடைக்கும் தொகையை அர்ச்சகர்களுடன் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து பங்கிட்டு கொள்வதாகவும், இதனால் கோயிலுக்கு வரவேண்டிய வருவாய் தொடர்ந்து தடைபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கடைகளில் கூடுதல் வாடகை வசூலிப்பது, ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது என உயர் அதிகாரிகள் சிலர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவோடு, இவ்வளவு நாட்களும் அவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், இதுதொடர்பான முழு விபரத்தையும் அமைச்சர் ரமேஷ் தனது ஆய்வின்போது சேகரித்து வைத்துள்ளதாகவும், எனவே விதிமுறை மீறியவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என அனைவரும் இன்னும் சில நாட்களில் இடமாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி
    Next Article ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!
    Editor TN Talks

    Related Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    July 25, 2026

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    July 25, 2026

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    தென்சீனக் கடலில் பதற்றம்..!! பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா அட்டாக்..!!

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.