Close Menu
    What's Hot

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!
    Featured

    ஐபிஎல் : “ஈசாலா கப் நம்தே”..! 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு..!

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    19வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்றது பெங்களூரு அணி. முதலில் அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், குஜராத் அணி வீரர்கள் முதலில் களம் கண்டனர்.

    தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில், 12, 10 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அடுத்து களமிறங்கிய நிஷாந்த் 20 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களில், அர்ஷத் கான் 15 ரன்களிலும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் மட்டும் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

    பெங்களூரு தரப்பில், ரஷிக் சமால் தர் அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், ஜேசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், க்ருணால் பாண்டியா 1 விக்கெட்டையும் எடுத்தனர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் தொடக்கம் முதலே ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

    விராட் கோலி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து இறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி தனித்து நின்று 75 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

     

    இந்தத் தொடரில் வெற்றியடைந்த பெங்களூரு அணி வீரர்களுக்கு ரூ.20கோடி பரிசுத் தொகையும், 2ம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு ரூ.13கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. ஆட்ட நாயனகான 75 ரன்கள் அடித்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 17 வருடங்களுக்கு பிறகு போன வருடம் முதல்முறையாக ஐபில் கோப்பையை வென்ற பெங்களூரு அணி, இந்த வெற்றியின் மூலம் தற்பொது மீண்டும் அந்தக் கோப்பையை தன்னிடத்தே வைத்துக் கொண்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?
    Next Article IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!
    Editor TN Talks

    Related Posts

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    July 25, 2026

    மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.

    July 25, 2026

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ருமேனியாவில் ஜனாதிபதி முர்முவுக்கு கிடைத்த பெருமை..!! டாக்டர் பட்டம் வழங்கி கௌரவம்..!!

    மெட்ரோ, இன்டர்நெட்டை தடுக்கும் மத்திய அரசால், வினாத்தாள் கசிவை தடுக்க முடியாதா?. ராகுல் காந்தி கடும் தாக்கு!.

    ஒளிந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர்… காவல் மரணங்களில் SORRY கூட கேட்காதது ஏன்? – மு.க.ஸ்டாலின் காட்டம்

    வெற்று வாக்குறுதியால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது..!! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

    24 மணி நேரத்தில் 303 மில்லியன் வியூஸ்!. உலக சாதனை படைத்த பிரதமர் மோடியின் ரீல்ஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.