Close Menu
    What's Hot

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார் உதயநிதி..! அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..!
    தமிழ்நாடு

    உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார் உதயநிதி..! அமைச்சர் அருண்ராஜ் குற்றச்சாட்டு..!

    Editor web4By Editor web4June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மருத்துவ உயர் படிப்பில் 151 இடங்களை மத்திய அரசிடம் சரண்டர் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

    ”உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.

    கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் “All India merit list” மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.

    ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய்
    அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

    நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

    கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதகை : நகர மன்றத்தில் முதல்வர் படத்துடன் ஸ்டாலின், இபிஎஸ் படங்கள்..! பரபரப்பான கூட்டம்..!
    Next Article காயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாள்..!! துயிலிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை..!!
    Editor web4

    Related Posts

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    June 30, 2026

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    June 30, 2026

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    ”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!

    ஆயிரக் கணக்கான இடங்கள் காலி; அரசு கல்லூரிகளில் சேர்க்கையை முறைப்படுத்துக – அரசுக்கு மமக வலியுறுத்தல்

    வெளியே வராத ஜான் ஆரோக்கியசாமி.. இப்போது திடீர் என்ட்ரி.. காரணம் என்ன?

    ஃபிஃபா உலகக் கோப்பை 2026: “ஜெர்மனி இனி முதல் தர அணி அல்ல” – பயிற்சியாளர் நாகல்ஸ்மேன் வேதனை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.