Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை நாக்-அவுட் த்ரில்லர்!. 88 ஆண்டுக்கால காத்திருப்பு!. பிரேசிலின் பிரம்மாண்ட கம்பேக் வெற்றி!

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!
    அரசியல்

    செய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!

    Editor web2By Editor web2June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 06 30 13h42m44s345
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே காளவாக்கம் பகுதியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, ஒரு செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர் சந்திப்பில், “பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுடன் அரசியல் பயணித்த நீங்கள், தற்போது விஜயுடன் இணைந்தது ஏன்?” என்று நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த வைகோ, “பெரியாரை நெஞ்சில் வைத்து வாழ்பவன் நான். அண்ணாவின் நாடாளுமன்ற பேச்சுகளை தொடர்ந்து கேட்டு வளர்ந்தவன். ஆனால் திமுக, நான் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயன்றதாக பழிசுமத்தியது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று செய்தியாளரிடமே எதிர்கேள்வி எழுப்பினார்.

    vlcsnap 2026 06 30 13h42m56s040

    தொடர்ந்து, “உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இருப்பது போல எனக்கும் கேட்க உரிமை உள்ளது. விஜய் சிறு குழந்தை அல்ல; சினிமாவில் சாதித்து, 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கம் மூலம் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு நடந்தபோது இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தவர்” என்று வைகோ கூறினார்.

    மேலும், “திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், ஊழல் அதிகமாக இருந்தது” என்று குற்றம்சாட்டிய அவரிடம், “இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இருந்துவிட்டு இப்போது ஏன் விமர்சிக்கிறீர்கள்?” என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வைகோ, “கூட்டணி தர்மத்திற்காக இதுவரை பேசவில்லை. இப்போது கூட்டணியில் இல்லை; அதனால் பேசுகிறோம்” என்றார்.

    இதற்கிடையில், கேள்வி எழுப்பிய நாளிதழைக் குறிப்பிட்டு, “அது மஞ்சள் பத்திரிகை… நீங்களும் மஞ்சள் பத்திரிகையா?” என்று செய்தியாளரை நோக்கி வைகோ ஆவேசமாகக் கூறி, “வெளியே போங்கள்” என தெரிவித்தார்.

    vlcsnap 2026 06 30 13h43m03s959

    இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மதிமுக நிர்வாகிகள் செய்தியாளரை நோக்கி பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு செய்தியாளர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

    MDMK PressMeet TamilNaduPolitics Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”சம்பள பாக்கி ரூ.8.39கோடியை உடனடியாக தருக”…! உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு..!
    Next Article ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    உலகக்கோப்பை நாக்-அவுட் த்ரில்லர்!. 88 ஆண்டுக்கால காத்திருப்பு!. பிரேசிலின் பிரம்மாண்ட கம்பேக் வெற்றி!

    June 30, 2026

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    June 30, 2026

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை நாக்-அவுட் த்ரில்லர்!. 88 ஆண்டுக்கால காத்திருப்பு!. பிரேசிலின் பிரம்மாண்ட கம்பேக் வெற்றி!

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க தயாரில்லை- எஸ்பி.வேலுமணி ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.