Close Menu
    What's Hot

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    சந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!
    Featured

    ஆசிய விளையாட்டு போட்டி!. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!. தமிழக வீராங்கனைக்கு வாய்ப்பு!

    Editor web3By Editor web3June 30, 2026Updated:June 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    India womens squad
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்த போதிலும், ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா  துணை கேப்டனாக நீடிக்கிறார்.

    உலகக்கோப்பை அணியில் இருந்து ஒரேயொரு மாற்றம் மட்டுமே இந்த அணியில் செய்யப்பட்டுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக விக்கெட் கீப்பர் பேட்டர் யாஸ்திகா பாட்டியா அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜி. கமலினி  அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மேலும், உலகக்கோப்பை தொடரின் போது நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடற்தகுதி நிரூபிக்கப்பட்ட பிறகே அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில் அவருக்குப் பதிலாக விளையாடிய பிரேமா ராவத் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    மீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்: ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரில் வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 வடிவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆசியாவின் முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2022 ஆசிய விளையாட்டில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கம் வென்ற நிலையில், இந்த 2026 தொடர் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கான ஒரு முக்கிய தளமாக அமையவுள்ளது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிர் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), பாரதி புல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல்*, ராதா யாதவ், நந்தினி சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    Asian Games BCCI announces G. Kamalini (WK) Harmanpreet Kaur to lead India women's squad player from Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெய்தியாளர் கேள்வியால் டென்ஷன் ஆன வைகோ… ”கமிஷன், கட்டிங், கரப்சன்” என திமுக ஆட்சி மீது புகார்!
    Next Article மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்
    Editor web3
    • Website

    Related Posts

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    June 30, 2026

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    June 30, 2026

    சந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெயிலை எதிர்கொள்ள புது ஐடியா!. ‘நீர் பீரங்கி’ ஸ்ப்ரே! வைரலாகும் ஐரோப்பிய ஸ்டைல்!

    குளோபல் ஸ்கில்ஸ் சேலஞ்ச் 2026: இந்தியாவுக்கு 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்!

    சந்தர்ப்பவாத எடப்பாடி பழனிசாமி; தீய சக்தியுடன் எப்படி அதிமுக கைகோர்க்க முடியும்? – அதிமுகவை விட்டு வெளியேறினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

    உலகக்கோப்பை நாக்-அவுட் த்ரில்லர்!. 88 ஆண்டுக்கால காத்திருப்பு!. பிரேசிலின் பிரம்மாண்ட கம்பேக் வெற்றி!

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.