Close Menu
    What's Hot

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    மீன் வளத்தை பாதுகாக்க.. கேரளத்தில் நாளை முதல் 52 நாள் மீன்பிடித் தடை அமல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்..!! உத்தரவை எதிர்த்த வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!!
    Featured

    தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்..!! உத்தரவை எதிர்த்த வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!!

    editor5By editor5June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகத்தின் அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மாநில தகவல் ஆணையம் மே 25 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 1 அன்று அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

    ஜூன் 5-ம் தேதிக்குள் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனுவின்போது, மனுதாரர் தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தகவல் உரிமைச் சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதாகவும், சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசு பாடத்திட்ட பள்ளிகளை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    மேலும், சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்ய முடியாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பள்ளிகள் விதிகளின்படி கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்விக் கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது என தெளிவுபடுத்தினார். தகவல் உரிமைச் சட்டத்தின் விலக்குப் பிரிவுகளில்கூட பொது நலன் சார்ந்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி, “கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல. அதன் விவரங்களை சொல்லலாமே” என கருத்து தெரிவித்தார்.

    பெற்றோர்கள் பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் அதிகப்படியான கட்டண வசூல், மறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்ட புகார்களை எழுப்பி வரும் நிலையில், இந்த உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றது. பல பெற்றோர்கள் இதை நல்ல தீர்வாகப் பார்க்கின்றனர். இருப்பினும், தனியார் பள்ளி நிர்வாகங்கள் இதை நிர்வாக சிரமம் மற்றும் தனியுரிமை மீறல் எனக் கருதுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கின் முடிவு மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தி?. அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!. அவசர ஆலோசனை!
    Next Article மாஸ் காட்டும் அண்ணாமலை..!! படையெடுக்கும் இளைஞர்கள்..!! 1 மணி நேரத்தில் 1 லட்சம் உறுப்பினர்கள்..!!
    editor5

    Related Posts

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    June 8, 2026

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    June 8, 2026

    மீன் வளத்தை பாதுகாக்க.. கேரளத்தில் நாளை முதல் 52 நாள் மீன்பிடித் தடை அமல்..!!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் அட்டாக்..!! மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்..!!

    பார்முலா 1-ஐ ஆளும் 19 வயது இளம் புயல்..!! தொடர்ச்சியாக 5-வது வெற்றி..!!

    மீன் வளத்தை பாதுகாக்க.. கேரளத்தில் நாளை முதல் 52 நாள் மீன்பிடித் தடை அமல்..!!

    8.2 ரிக்டர்.. நிலநடுக்கத்தால் ஆட்டம் கண்ட பிலிப்பைன்ஸ்..!! மரண பீதியில் ஓடிய மக்கள்..!!

    சிலுவம்பாளையமே சிரிக்கிறது ; ஓரம்போங்க மிஸ்டர் தீ.போ.ச – கலாய்க்கும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.