Close Menu
    What's Hot

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தி?. அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!. அவசர ஆலோசனை!
    Featured

    பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தி?. அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!. அவசர ஆலோசனை!

    Editor web3By Editor web3June 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sp.velumani alosanai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மீண்டும் வெடித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, சமீபத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்தது.

    முன்னதாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் சிலரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டது. இந்தநிலையில், ஒன்றிணைந்த பிறகும் பறிக்கப்பட்ட முக்கிய கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படாததால், வேலுமணி தரப்பினர் கடும் குழப்பத்திலும் அதிருப்தியிலும் இருந்து வந்தனர். இதன் காரணமாகவே, மூத்த தலைவர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கடந்த சில நாட்களாக இபிஎஸ்-ஐ நேரில் சந்திப்பதைத் தவிர்த்து, தங்களது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

    ஜூன் 4-ஆம் தேதிக்குள் (நேற்று) அதிருப்தியில் உள்ள தலைவர்களுக்கு கட்சியில் மீண்டும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் அல்லது அவர்கள் இடம்பெறும் வகையில் புதிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும் என இபிஎஸ் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட கெடு முடிந்தும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இபிஎஸ் தலைமை மீது அதிருப்தியடைந்த தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

    அதன்படி, சென்னை எம்.ஆர்.சி நகரில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது ஒன்றுகூடி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், அதிமுகவின் இந்த முக்கியத் தலைவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக மீண்டும் தனி அணியாகத் திரள வாய்ப்புள்ளதால், கட்சியின் தலைமை இந்த சலசலப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூன் 18-ல் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!. ஆளுநர் உரையுடன் தொடக்கம்!
    Next Article தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரம்..!! உத்தரவை எதிர்த்த வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    July 28, 2026

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    July 28, 2026

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!

    சஞ்சு சாம்சன் VS அபிஷேக் சர்மா!. “கடினமான முடிவை” எடுங்கள்!. தேர்வுக்குழுவுக்கு அறிவுறுத்தல்!

    பதக்க வேட்டையில் இந்தியா: காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று அசத்தல்!

    காமன்வெல்த் 2026!. 5வது நாளில் 6 பதக்கங்களை குவித்த இந்தியா!. புள்ளிப்பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!. 

    டெல்லி பேரணி: வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள்! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.