Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மரணத்தை வென்ற நம்பிக்கை ; உதாரணமாகி இருக்கும் எவரெஸ்ட் வழிகாட்டி!
    Featured

    மரணத்தை வென்ற நம்பிக்கை ; உதாரணமாகி இருக்கும் எவரெஸ்ட் வழிகாட்டி!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 nepal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடும் பனி மலையில் மாயமான எவரெஸ்ட் சிகர வழிகாட்டி 6 நாட்களுக்குப் பின்னர் மரணத்தை வென்று மீட்கப்பட்டிருப்பது நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது.

    நேபாளத்தைச் சேர்ந்தவர் தவா ஷெர்பா (Dawa Sherp). எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்றம் செல்பவர்களுக்கான வழிகாட்டியாக  இருந்து வருகிறார். புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இவரை ஹிலாரி தவா எனவும் மலையேற்றத்துக்கு வருபவர்கள் அழைப்பதுண்டு.

    கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற தவா ஷெர்பா, பின்னர் கீழே வரும்போது மாயமாகி இருக்கிறார்.

    7500 அடி உயரத்துக்கு மேல் கடும்பனியில் மாயமானவரைக் கண்டுபிடிக்க முடியாமல் உடன் சென்றவர்கள் இறங்கியுள்ளனர்.

    கடும் குளிர், உறைபனி,  குறைவான ஆக்ஸிஜன் உள்ள அந்தப் பகுதியில் மாயமான தவா ஷெர்பா நிச்சயம் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டுள்ளது. அவரின் மனைவியும் கூட காத்மண்டுவில், கணவருக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டார்.

    ஆனால், எல்லோரின் எண்ணங்களையும் உடைத்துப்போட்டு 5 நாட்களாக மரணத்துடன் தனது நம்பிக்கையைக் கொண்டு மோதி உயிர்பிழைத்திருக்கிறார் தவா ஷெர்பா.

    வியாழக்கிழமை அன்று, எவரெஸ்ட் மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தூய்மைக் குழுவினர், ஒரு மனிதர் மெல்ல மெல்ல பனிப்பாறைகளுக்கு நடுவே இருந்து தவழ்ந்து வருவதைப் பார்த்து அதிர்ச்சியானவர்கள், அருகில் சென்றுள்ளனர். அப்போதுதான் அது தவா ஷெர்பா எனத் தெரியவர, உடனடியாக துரிதமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

    இதன்பின்னர், உயிருடன் மீட்கப்பட்ட தவா ஷெர்பா மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    பல ஆண்டுகளாக வழிகாட்டியாக இருந்த ஷெர்பா,  தனது அனுபவத்தின் மூல்மும், மலையேற்றத்துக்கு வந்தவர்கள் விட்டுச் சென்ற கூடாரங்களைப் பயன்படுத்தி குளிரில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு எவரெஸ்ட் மலையேற்ற சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகரம் தொட்டு சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், மாயமாகி ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணத்தை வென்றுள்ள தவா ஷெர்பாவின் நம்பிக்கைதான் மிகப்பெரும் சாதனையாக மலையேற்றம் செல்பவர்களால் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்கானுக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு; மானவ் சுதர் அறிமுகம்!
    Next Article கோவை : பள்ளிப் பேருந்துகளுக்கு அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் தடை..! குடியிருப்பு வாசிகள் போராட்டம்..!
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.