Close Menu
    What's Hot

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!. பீட்சா டெலிவரி செய்ய சென்ற இந்திய மாணவர் சுட்டுக் கொலை!.
    Featured

    அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!. பீட்சா டெலிவரி செய்ய சென்ற இந்திய மாணவர் சுட்டுக் கொலை!.

    Editor web3By Editor web3June 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    us Anshul Kuncha Shot Dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பிலடெல்பியாவின் நார்த் பகுதியில் உள்ள ‘ரேமண்ட் ரோசன் ஹோம்ஸ்’ குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு மர்ம நபர்கள் சிலர் பீட்சா ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டரை டெலிவரி செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் அந்த இளைஞரின் தலையில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளது.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், பாதிக்கப்பட்ட இளைஞர் பீட்சா பையை எடுத்துச் செல்வதும், அவரைத் தொடர்ந்து கறுப்பு உடை அணிந்த இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்வதும் பதிவாகியுள்ளது. நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட போலீஸார், டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

    துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞர் இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த அன்ஷுல் குஞ்சா (28) என்பது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள சைதன்யா பாரதி தொழில்நுட்பக் கழகத்தில் (CBIT) கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த அன்ஷுல், அமெரிக்காவில் பிசினஸ் அனாலிடிக்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பென்சில்வேனியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ‘டேட்டா வேலிடேஷன் அனலிஸ்ட்’ ஆகவும் பணியாற்றி வந்தார். தனது கூடுதல் செலவுகளுக்காக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர வேலையாக பீட்சா டெலிவரி செய்யும் பணியை அவர் செய்து வந்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அன்ஷுலின் சகோதரி தன்வி கூறுகையில், “என் சகோதரனைக் கொல்வதற்காகவே மர்ம நபர்கள் திட்டமிட்டு வலை விரித்துள்ளனர் . காலி வீட்டிற்கு பீட்சா ஆர்டர் செய்து, அவனது தலையிலேயே மூன்று முறை சுட்டுவிட்டு, உடலை நடுரோட்டில் வீசிச் சென்றுள்ளனர்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

    இந்த கொடூரச் சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அன்ஷுல் குஞ்சாவின் அகால மரணம் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், அவரது உடலை இந்தியா கொண்டு வரவும், குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளை வழங்கவும் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதி.மலை கோவிலில் பக்தர்களை ஏமாற்ற முயற்சி..!! உடனே களத்தில் இறங்கிய அமைச்சர்..!! அதிரடி திட்டம்..!!
    Next Article “தீர்ந்து போன சக்தி அல்ல, தீர்த்துக் கட்டப் போகும் சக்தி”!. தவெக-அதிமுக இடையே வெடித்த X போர்!
    Editor web3
    • Website

    Related Posts

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    June 8, 2026

    கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!

    June 8, 2026

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!

    கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க..!! What bro.. It’s very wrong bro..!! மாரிதாஸ் கைதுக்கு அதிமுக கண்டனம்..!!

    அரசு மருத்துவமனையில் திடீர் விசிட்!. நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் பர்வேஸ்!

    தொடங்கியது இந்தியா கூட்டணி கூட்டம்..!! புறக்கணித்த திமுக, ஆம் ஆத்மி கட்சிகள்..!!

    தன்னை கொலை செய்ய மும்பை கூலிப்படை – அருண் ஐபிஎஸ் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.