Close Menu
    What's Hot

    முட்டி மோதும் வல்லரசு நாடுகள்!. உலகில் அதிகரிக்கும் அணு ஆயுதப் போட்டி!. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”மாரிதாஸ் கைது  அதிகாரத் திமிரின் உச்சம்” – சீமான் காட்டம்
    Featured

    ”மாரிதாஸ் கைது  அதிகாரத் திமிரின் உச்சம்” – சீமான் காட்டம்

    Editor web2By Editor web2June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    யூடியூபர் மாரிதாஸ் மீதான தவெக அரசின் கைது நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான தம்பி மாரிதாஸை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது வன்மையான கண்டனதுக்குரியது. தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தோலுரித்து வரும் மாரிதாசைக் கைதுசெய்திருப்பது அதிகாரத் திமிரின் உச்சமாகும்.

    மாரிதாசின் கருத்துகள் அவதூறானவை எனக் கருதினால் சட்டப்படியாக வழக்குத் தொடுக்கலாம்; மாறாக, எவ்வித விசாரணையும் இன்றி உடனடி கைது நடவடிக்கை என்பது சனநாயக விரோதமாகும். பட்டப்பகலில் படுகொலை செய்வோர், பாலியல் வன்கொடுமை செய்வோர்,  போதைப்பொருட்கள் விற்பனை செய்கின்ற கொடுங்குற்றவாளிகள் மீதெல்லாம்  பாயாத அதிரடி  கைது நடவடிக்கைகள், அரசை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் பாய்கிறது என்றால் இந்த அரசும் அதிகாரமும் யாருக்கானது?  இதுதான் மக்கள் வேண்டிய மாற்றமா? ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியினரையும், அரசை விமர்சிப்போரையும் தனிநபர் தாக்குதல் தொடுத்து, இணையவெளியில் அவதூறுகளையும், ஆபாசத்தையும் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடும் நிலையில், அவர்கள் மீதெல்லாம் பாயாத சட்டம் தம்பி மாரிதாஸ் மீது பாய்கிறதென்றால், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் போக்காகும். தவெகவை மற்றவர்கள் விமர்சிப்பதை கவனிக்கும் காவல்துறை, தவெகவினர் மற்றவர்களை விமர்சிப்பதை கண்டுகொள்ளாதது ஏன்?

    திருச்சியில் பேசிய முதல்வர் விஜய், ‘என்னை விமர்சிப்பவர்கள் நிறுத்திவிட வேண்டாம், தொடர்ந்து விமர்சியுங்கள்’ என்று மேடையில் வீரவசனம் பேசிவிட்டு, இப்போது அற்ப விமர்சனத்திற்கு அதிரடி கைது நடவடிக்கை எடுப்பதற்கு பெயரென்ன?  முந்தைய திமுக அரசு செய்த கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும்  அதே கொடுஞ்செயலை தவெக அரசும் தொடர்வதற்கு பெயர்தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! ஆளும் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறுவோரை அச்சுறுத்த முனையும் இத்தகைய மிரட்டல்கள் அப்பட்டமான பாசிசப்போக்காகும். பந்து எப்போதுமே ஒருவரிடம் மட்டுமே இருந்துவிடுவதில்லை. இன்று உங்கள் கைகளில் இருக்கும் பந்து நாளை மற்றவர்கள் கைகளுக்கும் இடம்மாறும்; பார்த்து விளையாடுங்கள்.

    ஆகவே, தவெக அரசு பழிவாங்கும் போக்கோடு நடந்துகொள்ளாமல் சனநாயகத் தன்மையோடு இயங்க வேண்டுமெனவும், தம்பி மாரிதாசை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலில் திருச்செந்தூர்.. இப்போ பழனி..!! அதிரடி ஆய்வில் இறங்கிய அமைச்சர் ரமேஷ்..!!
    Next Article ஈரான் போர் பதற்றம்!. தமிழர்களுக்கு உதவ அவசர எண்கள் அறிவிப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    முட்டி மோதும் வல்லரசு நாடுகள்!. உலகில் அதிகரிக்கும் அணு ஆயுதப் போட்டி!. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

    June 8, 2026

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    June 8, 2026

    பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முட்டி மோதும் வல்லரசு நாடுகள்!. உலகில் அதிகரிக்கும் அணு ஆயுதப் போட்டி!. வெளியான ஷாக் ரிப்போர்ட்!

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    பிலிப்பைன்ஸில் கோரத்தாண்டவமாடிய நிலநடுக்கம்!. 32 பேர் பலி; 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

    ”மின்சார வாரியத்தில்  15,000 பேருக்கு வேலை!”

    திமுக கூட்டணி இப்போது இல்லை; ஸ்டாலின், EPS யார் கூறினாலும் ஏற்க முடியாது!. சிபிஎம் சண்முகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.