Close Menu
    What's Hot

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!
    Featured

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 mariya wilson
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2022 ஆகஸ்ட் 8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில், அமைச்சர் மரிய வில்சன், தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலினை தாக்கியதாக கூறி, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை நேரடியாக முடிவு செய்யாமல், இருதரப்பும் சமரசத் தீர்வு மையத்தை அணுகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதையடுத்து, இன்று மூன்றாவது முறையாக சமரசத் தீர்வு மைய நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அமைச்சர் மரிய வில்சனும், அவரது சகோதரர் மரிய குலோத்தும் நேரில் ஆஜராகினர். இருதரப்பினரிடமும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், கருத்து வேறுபாடுகள் நீடித்ததால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதனால், வழக்கில் சமரச வாய்ப்பை மேலும் ஆராயும் நோக்கில், இருவரும் மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சமரசத் தீர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, பேச்சுவார்த்தையை நீதிபதி ஒத்திவைத்தார்.

    chennaihighcourt MaryWilson Mediation TamilNaduNews
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!
    Next Article பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
    Editor web2
    • Website

    Related Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    July 28, 2026

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    July 28, 2026

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.