Close Menu
    What's Hot

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
    Featured

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Girl child sucide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராதா நகர், பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நடராஜ். அவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு நந்திதா (10) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வெண்ணிலா குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்து சென்றதாக கூறப்படுகிறது. அதேபோல், தந்தையான நடராஜும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு குழந்தைகளையும் நடராஜின் தாயார் பொன்னம்மாள் என்ற மூதாட்டி கூலி வேலை செய்து வளர்த்து வந்தார்.

    நந்திதா, திருப்பூர் மன்னரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் தங்களை கவனிக்க வராத ஏக்கம் ஒருபுறமும், வயதான பாட்டி கடும் வறுமையில் உழைத்து தங்களை வளர்ப்பதை பார்த்த வேதனை மறுபுறமும் சிறுமியை கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    vlcsnap 2026 07 28 20h01m23s913

    சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நந்திதா, வீட்டருகே மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சிறுமியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் மனமுடைந்த நந்திதா வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய பாட்டி பொன்னம்மாள், பேத்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    vlcsnap 2026 07 28 20h01m44s608

    மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை திட்டியதாக கூறப்படும் பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Childsucide Poverty tiruppur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!
    Next Article மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    July 28, 2026

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    July 28, 2026

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.