Close Menu
    What's Hot

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!
    Featured

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 kayalvizhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அந்த கட்டிடத்தின் லிஃப்ட் பழுதடைந்து செயல்படாததால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முதலில் கயல்விழியின் உதவியாளரிடம் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் புகார் தெரிவித்ததாகவும், பின்னர் நேரடியாக கயல்விழியிடமும் பழுதை சரிசெய்ய வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, கடந்த 20-ஆம் தேதி கயல்விழி நேரடியாக வங்கி கிளைக்கு சென்று மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில், அவர் வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கின் கன்னத்தில் அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இதையடுத்து, வங்கி மேலாளர் கடந்த 24-ஆம் தேதி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் கயல்விழி மீது அத்துமீறி நுழைதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கைதாகி விடுதலை

    பின்னர், விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று மதியம் கயல்விழி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் காவல் துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

    ChennaiNews kayalvizhi MKAlagiri SBI
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!
    Next Article உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    July 28, 2026

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    July 28, 2026

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்திய அணியில் பயிற்சியாளர் மாற்றம்:  ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை… விரைவில் புதிய நியமனம்!

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.