Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!
    தமிழ்நாடு

    சிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 28 18h28m09s133
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் எரிந்து சேதமடைந்தன.

    சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவார்பட்டியில்  குருசாமி என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான காகித மறுசுழற்சி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மறுசுழற்சிக்காக அதிகளவில் காகித பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், திடீரென காகித பண்டல்களில் தீப்பிடித்தது. காகிதங்கள் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக பரவி ஆலையின் பெரும்பாலான பகுதிகளை சூழ்ந்தது.

    தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    vlcsnap 2026 07 28 18h28m32s911

    இந்த தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை.

    தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    BreakingNews FireAccident SivakasiFire virudhunagar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனு மட்டும்.. பணம் வேண்டாம்! மானாமதுரை வட்டாட்சியரின் அறிவிப்புக்கு பொதுமக்கள் பாராட்டு!
    Next Article குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!
    Editor web2
    • Website

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.