Close Menu
    What's Hot

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»”வெற்றி பெற்றுக்கொள்ள; தோல்வி கற்றுக்கொள்ள!”- வைரமுத்து
    Featured

    ”வெற்றி பெற்றுக்கொள்ள; தோல்வி கற்றுக்கொள்ள!”- வைரமுத்து

    Editor web2By Editor web2June 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vairamuthu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடகிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு கலைஞரின் புகழ்மட்டம் சற்றும் குறையவில்லை என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

    மேலும், தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்று தனது கவித்துவமான பேச்சால் மேடையை அதிரவைத்தார்.

    அமைச்சர் பி.கே. சேகர்பாபு  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    இது குறித்து வைரமுத்து தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

    கலைஞரின் 103ஆம் பிறந்தநாள் விழாவுக்கு சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.

    கூட்டத்தின் எழுச்சியும் உணர்ச்சியும் கலைஞரின் புகழ்மட்டம் குறைந்துவிடவில்லை என்று கும்மியடித்தன.

    “தோல்வியில் வழி காண்கிறவன் மேதை; பழி போடுகிறவன் கோழை.

    இயக்கங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் தோல்வி என்பது ஆசான்

    தோல்வி என்பது சோர்வதற்கல்ல; ரப்பர் மரத்திற்கு ரணங்கள் புதிதல்ல

    தோல்வியைத் தூர நிறுத்திவிட்டு மக்களைப் பக்கத்தில் அழைத்துக்கொள்வார் கலைஞர்

    அதையே பின்பற்றுங்கள் வெற்றி என்பது பெற்றுக்கொள்ள; தோல்வி என்பது கற்றுக்கொள்ள” என்று பேசினேன். சுப.வீரபாண்டியன் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி மேயர் பிரியா ராஜன் பங்கேற்றுப் பாராட்டினார்கள். இவ்வாறு வைரமுத்து அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..?? அமைச்சர் செங்கோட்டையனின் நச் பதில்..!!
    Next Article டெல்லியை தொடர்ந்து புனே..!! ஒன்றுகூடும் கரப்பான்பூச்சிகள்..!! போராட்டம் அறிவிப்பு..!!
    Editor web2
    • Website

    Related Posts

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    June 9, 2026

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    June 9, 2026

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லஞ்சம் – ஊழல் குறைந்துள்ளது – ஜோசப் விஜய் ஆட்சிக்கு அன்புமணி சர்டிபிகேட்

    மீண்டும் டெல்லி செல்லும் விஜய்… பயணத்தின் நோக்கம் என்ன?

    எடப்பாடி கொடுத்த கடிதம்… தப்பிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பதவி!

    லாரி மீது கார் மோதி விபத்து – கர்ப்பிணி பெண் உள்பட மூவர் உயிரிழப்பு

    லாட்டரி மார்ட்டின் சொத்து: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.