Close Menu
    What's Hot

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!
    Featured

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று ஜூன் 10ஆம் தேதி. கடந்த மே 10ஆம் தேதி, ச.ஜோசப் விஜய் என்னும் நான் என தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தலைவருமான விஜய் பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது.
    திமுக, அதிமுக என்னும் இருபெரும் அரசியல் கட்சியையும், ஓரம் கட்டிய தமிழக மக்கள் விரும்பிய மாற்றத்தை தவெக கொண்டு வந்துள்ளதா என்றால் கேள்விக்குறிதான்!
    தவெக நிகழ்த்திய அரசியல் மாற்றம் என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாதது.
    கூட்டணி ஆட்சி என்னும் பெயரில் எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்றது,
    மற்றொரு எதிர்க்கட்சியான அதிமுகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நான்குபேரை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சிக்கு இழுத்தது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் , மாவட்டச் செயலாளர்கள் என அதிமுக கூடாரத்தையே தன்பக்கம் இழுத்து காலி செய்து கொண்டிருக்கிறது.
    அரசியல் இப்படி என்றால் ஆட்சி நிர்வாகமோ என்னதான் செய்கிறார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என நாள் தோறும் நடக்கும் நிகழ்வுகள் கேள்வியை எழுப்பி வருகிறது.
    மே 10ஆம் தேதி தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாள் தொடங்கி தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அட்சயப் பாத்திரமாய் பெருகிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

    1. கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
    2. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
    3. மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை
    4. தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி
    5. சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு மின்வாரிய ஊழியர் சீரங்கன் என்பவர் பாலியல் தொல்லை
    6.சென்னை கோடம்பாக்கத்தில், 16 வயது சிறுவனை வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலரே மதுபோதையில் ஆழ்த்தி பாலியல் வன்கொடுமை முயற்சி
    7. சென்னை வேளச்சேரியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை
    8. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
    9. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு,
    10. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள ஏரிக்கரையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு,
    11. தென்காசியில் மாணவிக்கு சென்னை போலீஸ்காரர் பாலியல் தொல்லை,
    12. சென்னை கே.கே.நகரில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை
    உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

    திருச்சி மாவட்டம் கீழப்புலிவார்ரோடு பகுதியில் 14 வயது சிறுமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது சிறுமியும் கடத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல்
    1. சென்னை முடிச்சூரை சேர்ந்த கானா பாடகர்கள் பரத் மற்றும் சீனு, ஆறுபேர் கும்பலால் கொலை,
    2.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை, நகைக்காக கொலை செய்த தவெக நிர்வாகி,
    3.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை,
    4.தூத்துக்குடி அருகே வேன் ஓட்டுநர் படுகொலை வழக்கில் தவெகவினரை கைது செய்யக் கோரி போராட்டம்,
    5.சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை
    என 28க்கும் மேற்பட்ட கொடூரக் கொலைகள் தவெகவின் ஒருமாத ஆட்சியில் நிகழ்ந்துள்ளன.

    1.திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையின் காரணமாக செவிலியர் மாணவி உயிரிழப்பும்,
    2.திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டவரின் உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரமும்,
    3. சீர்காழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின்வெட்டால் கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்த அநியாயமும் தவெக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் குறித்த ஒருவித அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது.

    இவை தவிர ஆளும் கட்சியினரின் மாமூல் கேட்டு மிரட்டல்கள், போதைப் பொருள் குற்றங்கள், மக்கள் போராட்டங்கள், அரசு அலுவலகத்திலேயே ஹார்டு டிஸ்க் கடத்தல் என நித்தமும் குற்ற நிகழ்வுகள் தொடர்கதையாகிக் கொண்டே இருக்கின்றன.
    தூய சக்தி என ஆட்சியில் அமர்ந்தவர்கள் தீய சக்திக்கும், தூர்ந்து போன சக்திக்கும் மேலாக மாறியிருப்பதை இந்த ஒரு மாத ஆட்சி நிலவரம் அம்பலப்படுத்தி இருக்கிறது.

    Tamil Nadu Crime Tamil Nadu Law and Order TVK Government Vijay Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!
    Next Article இயக்குநர் இமயம் செதுக்கிய டாப் 10 ‘மண்வாசனை’ நாயகிகள்
    Editor TN Talks

    Related Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    June 10, 2026

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    June 10, 2026

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    இயக்குநர் இமயம்… பாரதிராஜா மறைவு!. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

    தவெகவின் மிகப்பெரிய வெற்றி.. இதை நாங்க எதிர்பாக்கல..!! அமித்ஷா பேச்சு..!!

    ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு..!! கண்ணீருடன் நேரில் ஓடோடி வரும் தமிழ் திரையுலகம்..!!

    திமுக கள ஆய்வு குழு!. அறிக்கை தாக்கல் செய்ய இன்று இறுதி நாள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.