Close Menu
    What's Hot

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சேலத்தில் ஒரு ’பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’… வேட்டையாடப்பட்ட 50 பெண்கள்… சிக்கிய தவெக பிரமுகர்!
    Featured

    சேலத்தில் ஒரு ’பொள்ளாச்சி பாலியல் கொடூரம்’… வேட்டையாடப்பட்ட 50 பெண்கள்… சிக்கிய தவெக பிரமுகர்!

    Editor web2By Editor web2June 12, 2026Updated:June 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sexual abuse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நினைவூட்டும் விதமாக சேலத்தில் அதே பாணியில் வறுமையில் வாடிய 50-க்கும் மேற்பட்ட பெண்களைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள அதிர்ச்சி விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து சிக்கும் தவெக பிரமுகர்கள்

    உதவி செய்வதாகக் கூறி பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தைச்  சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பிடித்துக் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எழுந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தவெகவினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போதைய சேலம் பாலியல் வன்கொடுமை நிகழ்விலும் தவெக நிர்வாகி ஒருவர் சிக்கி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏழை பெண்களுக்கு குறி

    சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், வேலைவாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் கடுமையான பொருளாதாரக் கடன் சுமையில் தவிக்கும் பெண்களைத் திட்டமிட்டுத் தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார். அவர்களுக்குப் பண உதவி மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

    அதன்பின்னர், அவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தனிமையான இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்தோடு நிறுத்தாமல், பெண்களின் அனுமதியின்றி அவர்களுடனான ஆபாசக் காட்சிகளையும், உரையாடல்களையும் ரகசியமாகத் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களைக் காட்டியே மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்களைத் தனது நண்பர்களின் பாலியல் பசிக்கும் பலியாக்க கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறாகச் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் இவரால் சீரழிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    மாட்டிக்கொண்ட கொடூரன்

    TVK accused

    தொடர் மிரட்டலால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், சாமர்த்தியமாக மணிகண்டனின் செல்போனை ஆராய்ந்தபோது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக, அதிலிருந்த சில முக்கியத் டிஜிட்டல் ஆதாரங்களைத் தனது மொபைலுக்கு மாற்றிக்கொண்டு, தைரியமாகத் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தலைமறைவாக முயன்ற மணிகண்டனை தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் தடய அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

    ஒரு புதிய அரசியல் கட்சியின் பொறுப்பில் இருந்துகொண்டு, ஏழைப் பெண்களின் வறுமையை ஆபாச வீடியோவாக மாற்றி மிரட்டிய இந்த விவகாரத்தில், தொடர்புடைய பின்னணி நபர்கள் அனைவர் மீதும் பாரபட்சமின்றி ‘குண்டாஸ்’ சட்டத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தி உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    Next Article மூகாம்பிகை கோயிலுக்கு முதல்வர் விஜய் வெள்ளி வாள் காணிக்கை!
    Editor web2
    • Website

    Related Posts

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    July 31, 2026

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    July 31, 2026

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    நாளை ஆந்திரா, கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி..!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.