Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!
    Featured

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Editor web3By Editor web3June 12, 2026Updated:June 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opening day mexico protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளாவிய கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2026 ஃபிஃபா உலகக்கோப்பை திருவிழா, மெக்ஸிகோவில் பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டங்கள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், மைதானத்தில் காணப்பட்ட காலி இருக்கைகளும், மெக்ஸிகோ நகர வீதிகளில் வெடித்த வன்முறையும் உலகக்கோப்பையின் முதல் நாளைக் கவலையளிக்கும் விதமாக மாற்றியுள்ளன.

    மெக்ஸிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில், மெக்ஸிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

    ஆனால், குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடந்த தென்கொரியா மற்றும் செக்கியா (Czechia) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் நிலைமை தலைகீழாக இருந்தது.  இப்போட்டியில் தென்கொரியா 2-1 என வெற்றி பெற்றாலும், மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் காலியாகவே காட்சியளித்தன. 45,664 கொள்ளளவு கொண்ட இம்மாநிலத்தில் 44,958 பேர் வந்திருந்ததாக வர்ணனையாளர்கள் கூறினாலும், கேமராக்கள் காலி இருக்கைகளைக் காட்டியது ஃபிஃபாவின் டிக்கெட் விற்பனை முறையின் மீது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    https://x.com/PolymarketSport/status/2065261603008774517?

    உலகக்கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவாக, இந்த முறை 50 கோடி   டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஃபிஃபா பெருமிதம் கொண்டிருந்தது. ஆனால், யதார்த்தத்தில் ரசிகர்களை ஈர்ப்பதற்காகப் பல போட்டிகளின் டிக்கெட் விலையை ஃபிஃபா குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மறுபுறம், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மெக்ஸிகோ சிட்டியின் வீதிகளில் மனித உரிமை மீறல்கள், தொழிலாளர்களின் அவல நிலை மற்றும் மெக்ஸிகோவில் மாயமாகும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்டித்துப் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் பெருந்திரளாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மெக்ஸிகோவின் தேசியப் பதிவேட்டின்படி தற்போது 1,34,460 பேர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்களும் வெடித்தன. மைதானத்திற்குள் காலி இருக்கைகள், மைதானத்திற்கு வெளியே மக்கள் போராட்டம் என ஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் நாள் பெரும் சவால்களுடன் தொடங்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகத்தை அழிக்கவே முக்கிய பதவிகளில் ஆதரவாளர்கள் நியமனம்: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் சாடல்!
    Next Article பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.