Close Menu
    What's Hot

    நாகை : காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..! நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!
    Featured

    உருகுதே… மருகுதே… ஒரே பார்வையாலே… இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று!

    Editor web3By Editor web3June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    g.v prakash birth day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், வெற்றிகரமான நடிகர் மற்றும் பாடகர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டு விளங்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று (ஜூன் 13) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது அசாத்திய திறமையால் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முத்திரை பதித்துள்ள அவரது இசை மற்றும் கலைப் பயணம் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு இதோ.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ், சிறு வயதிலேயே இசைச் சூழலில் வளர்ந்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலில் சிறுவனாகத் தனது குரலைப் பதிவு செய்தவர், பின்னர் ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களிலும் பாடினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘அந்நியன்’ படத்தில் பாடிய “காதல் யானை வருகிற ரெமோ” பாடல் இவருக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.

     அதாவது, அந்நியன்  திரைப்படத்தில் இசைமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான “காதல் யானை” பாடலின் தொடக்கத்தில் வரும் “ஹை ஹீல்ஸ் சிங்காரி…” என்ற ராப் போன்ற துரிதமான வரிகளையும், பாடலின் இடைப்பகுதிகளையும் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார்.

    2006ல் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில் திரைப்படத்தின் மூலம், தனது 19-வது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே “உருகுதே மருகுதே” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

    அதன்பின்னர், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களான செல்வராகவன், வெற்றிமாறன் மற்றும் ஏ.எல்.விஜய் ஆகியோருடன் இணைந்தார்.

    வெற்றிமாறன் கூட்டணியில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ மற்றும் ‘வாடிவாசல்’ வரை இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பின்னணி இசையை  வழங்கியுள்ளது.  ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மதராசப்பட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘சூரரைப் போற்று’ போன்ற படங்கள் இவரது இசைப் பயணத்தின் மைல்கற்கள் ஆகும்.

    சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷிற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்தது. இவரது துடிப்பான இசையும், உணர்வுப்பூர்வமான பின்னணி இசையும் அந்தத் திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.

    இசையமைப்பாளராக உச்சத்தில் இருக்கும்போதே, ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘நாச்சியார்’, ‘பேச்சுலர்’ மற்றும் சமீபத்தில் வெளியான படங்கள் வரை ஒரு நடிகராகவும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். குறிப்பாக, ‘நாச்சியார்’ திரைப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

    தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகைத் தாண்டி, ‘Trap City’ என்ற சர்வதேச ஆல்பம் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளார்.

    மிகக் குறுகிய காலத்தில் பல படங்களுக்கும் மேல் இசையமைத்து, இன்றும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ‘இசை அசுரனாக’ வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்!

    g.v prakash brith day G.V. Prakash Melting voice musical 'Asuran'
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!
    Next Article வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    நாகை : காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..! நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!

    July 31, 2026

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    July 31, 2026

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாகை : காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்..! நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு..!

    நாகை : படகு பழுதால் 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள்..! பத்திரமாக மீட்ட சக மீனவர்கள்..!

    தவெக அரசுக்கு முதல்வர் என்றாலே ஸ்டாலின் தான் நியாபகம் வருகிறார் போல..! முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி..!

    காவி நிறத்திற்கு மாறும் இந்திய ஹாக்கி சீருடை… “விளையாட்டுத் துறையிலும் அரசியலா..?”

    விஜய்யின் வெள்ளிக்கிழமை ரகசியம்.. பட்டு வேஷ்டி, சட்டைக்கு பின்னால் இருக்கும் சென்டிமென்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.