Close Menu
    What's Hot

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்து கணவருடன் சேர்ந்த மனைவி!. நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி!
    இந்தியா

    விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்து கணவருடன் சேர்ந்த மனைவி!. நீதிமன்றத்தில் நெகிழ்ச்சி!

    Editor web3By Editor web3June 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi divorce couple
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் கணவருடன் சேர்ந்த மனைவியின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.

    ஷிகா சிங் என்ற பெண்ணுக்கும், சௌரப் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் காரணமாக, ஷிகா தன் கணவரைப் பிரிந்தார். மேலும், சௌரப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கையும் தொடர்ந்து, விவாகரத்துக்கும் விண்ணப்பித்திருந்தார்.

    தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஷிகாவின் தந்தை மனமுடைந்து போனார். நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்கை நடத்தியதில், அவரது உடல்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஒரு கட்டத்தில், கடுமையான பண நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டது. போதிய பண வசதி இல்லாததால், அவர் ஒரு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

    இந்த விஷயம் கணவர் சௌரப்பிற்கு தெரியவந்தது. பழைய பகையையோ, தன் மீது சுமத்தப்பட்ட பழியையோ அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்த சௌரப், தன் மாமனாரை அங்கிருந்து மீட்டு, குர்கானில் உள்ள புகழ்பெற்ற, அதிநவீன வசதிகள் கொண்ட மேதாந்தா   மருத்துவமனையில் அனுமதித்தார்.

    லட்சக்கணக்கில் செலவான போதிலும், தன் சொந்தப் பொறுப்பில் அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். சௌரப்பின் இந்த மனிதநேயமிக்க செயலால், ஷிகாவின் தந்தை மறுவாழ்வு பெற்று தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளார்.

    இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டெல்லி நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை நாள் வந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஷிகா, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற தன் கணவர் செய்த தியாகத்தையும், அவரது பெருந்தன்மையையும் நினைத்து உருகிப்போனார்.

    https://x.com/rose_k01/status/2065110931932344792

    நீதிமன்ற அறைக்குள் சென்ற ஷிகா, அனைவர் முன்னிலையிலும் தன் விவாகரத்து பத்திரங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்தார்! தன் கணவர் சௌரப்பை ஓடிச்சென்று கட்டித்தழுவி, கண்ணீருடன் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.

    அன்பும், இக்கட்டான நேரத்தில் காட்டிய மனிதநேயமும் ஒரு உடைந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களும், மற்றவர்களும் இந்தத் தம்பதியின் செயலை கண்டு நெகிழ்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Court delgi divorce couple divorce papers husband touching moment Wife
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅப்போ ஆந்திரா; இப்போ தமிழ்நாடு – கில்லாடி கைதியை கோட்டை விட்ட கோவை போலீஸ்!
    Next Article ”அதிகாரிகளே சிறந்த நீதிபதிகள்… பொதுநல வழக்குகள் திட்டங்களை முடக்கும் மேடையல்ல!”
    Editor web3
    • Website

    Related Posts

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    July 30, 2026

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    July 30, 2026

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    விஜயின் அடுத்த நகர்வு..!! அவசர அவசரமாக முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.