Close Menu
    What's Hot

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு
    Featured

    4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவில் சிபிஐ விசாரணை; வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே 13-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய அதிமுக  சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும், அது நிலுவையில் இருந்த போது, மே 25ம் தேதி தவெக-வுக்கு  ஆதரவாக வாக்களித்த மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா ஆகியோரும், மே 26 ஆம் தேதி அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவும் பதவிகளை ராஜினாமா செய்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலில் நான்கு பேருக்கும் சீட் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது எனவும், அரசியல் லாப நோக்குடன் நான்கு எம்.எல்.ஏ.க்கள் தவெக வில் இணைந்துள்ளதால், இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது என்பதால், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தலுக்கு நூறு கோடி ரூபாய் வரை அரசுக்கு செலவு ஏற்படும் என்பதால், லாப நோக்குடன் ராஜினாமா செய்து விட்டு, கட்சி மாறிய நான்கு பேரையும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது

    அப்போது, நீதிபதிகள், முறைகேடுகள் நடந்துள்ளது எனக் கூற என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றனர்.

    இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கற்ஞர், நான்கு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த நாளிலேயே, ஆளுங்கட்சியில் இணைந்த விஷயத்தில் பெருந்தொகை சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது. தனிமனிதனாகிய மனுதாரரால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என்பதால், சிபிஐ விசாரணை கேட்பதாகக் குறிப்பிட்டார்.

    இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

    CBI investigation Court verdict MLA Resignation
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.75,000 கடன்கள் முழுமையாக தள்ளுபடி..! விவசாயிகளுக்கு குட் நீயூஸ் சொன்ன முதலமைச்சர்..!
    Next Article ரஜினியுடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு; அண்ணாமலையால் பீதியா?
    Editor TN Talks

    Related Posts

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    June 20, 2026

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    June 20, 2026

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெகவின் நல்லாட்சி தொடர வேண்டும்..! திமுக கூட்டணியில் இருந்து விலகிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்..!

    புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இலாகா பங்கீடு இழுபறி..!! நீடிக்கும் பதற்றம்..!!

    கேதார்நாத் யாத்திரை!. சுமார் 200 பேர் மரணம்!. உத்தரகாண்ட் அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

    நான் மிகவும் போற்றும் உலகத் தலைவர்கள் இவர்கள்..!! யாரை சொல்கிறார் அதிபர் டிரம்ப்..??

    லண்டனில் அதிர்ச்சி சம்பவம்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரயில்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.