Close Menu
    What's Hot

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி
    Featured

    இயலாமையை மூடி மறைக்கிறது தவெக அரசு; வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு பதிலடி

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 thangam thennarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழக அரசின் இயலாமையை மூடிமறைக்கும் விதமாகவே நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை உள்ளது.

    தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காகவே நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    திமுக ஆட்சியில் கடந்த 20016 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.

    ஆனால், திமுகவின் 5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்?

    வெள்ளை அறிக்கையில் முந்தைய ஆட்சிகள் பற்றி இல்லாதது யாரை காப்பாற்றுவதற்கான முயற்சி?

    தீர்ந்து போன சக்தி என அதிமுகவை கூறிய தவெகவுக்கு ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு?

    எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்பதுதான் இதற்கு காரணமா/

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து என்ன சொல்லி தப்பித்து கொள்வது என்பது தான் வெள்ளை அறிக்கையின் நோக்கம்.

    நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை என்பது வெறும் வெற்று அறிக்கைதான்.

    வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எஸ்கேப் ஆகவே தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றும் கூறலாம்

    சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும் அதே பல்லவியை பாடியிருக்கிறது வெள்ளை அறிக்கை.

    புதிய திட்டங்கள் எதுவும் தற்போதைய சூழலில் இல்லை என்பதையே தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கையில் கூறுகிறது.

    கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என எடுத்த எடுப்பிலேயே த.வெ.க. கூறுகிறது.

    தமிழகத்தின் கடன் இரண்டு மடங்காக முந்தைய ஆட்சிகளிலும் உயர்ந்துள்ளது.

    தொடர்ச்சியாக அனைத்து ஆட்சிகளிலும் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

    த.வெ.க. 5 ஆண்டுகள் ஆட்சியை முடித்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும்.

    நாங்கள் வாங்கிய கடனை விட த.வெ.க. குறைவாக வாங்கினால் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்

    குஜராத்தில் மக்கள் நலத்திட்டங்கள் என்று எதுவும் கிடையாது. ஆனால், தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பல செயல்படுத்தப்படுகின்றன.

    சிங்கப்பெண் திட்டத்திற்கான நிதி மூலதன செலவில்தான் வருகிறதா?

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு பணி நடக்கிறது.

    மூலதன செலவில் நடைபெறும் திட்டங்களை நிறுத்தி வருகிறது த.வெ.க. அரசு.

    மத்திய அரசு தரவேண்டிய நிதிகள் குறித்து வெள்ளை அறிக்கையில் பேசாதது ஏன்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    DMK Tamil Nadu Politics thangam thennarasu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்  இந்தியாவுக்கு எதிராக பந்துவீச்சு
    Next Article உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப்போட்டி?
    Editor TN Talks

    Related Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.