Close Menu
    What's Hot

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து; பத்திரமாக மீட்கப்பட்ட 26 மாணவர்கள்
    தமிழ்நாடு

    அரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து; பத்திரமாக மீட்கப்பட்ட 26 மாணவர்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 school fire
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் சமையலறை பகுதியில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு நிலவியது.

    இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரே ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக மீட்டார். இதனால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கிராமங்களில் தீயணைப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருவதன் பயனாக, பொதுமக்கள் பதற்றமடையாமல் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்த தீ விபத்து சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்டது  என்பது குறித்து  சம்பவம் தொடர்பாக சத்துணவு பொறுப்பாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Fire accident government school Kitchen Fire Students Rescued
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎலான் மஸ்க் வரலாற்று சாதனை..!! SpaceX பங்குச் சந்தையில் அமேசானைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடம்..!!
    Next Article காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்!. விபத்தில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!. பொதுமக்கள் கோரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    June 18, 2026

    சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

    June 18, 2026

    தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: பொன்னேரி கரை போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.60,000 பறிமுதல்..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

    தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: பொன்னேரி கரை போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.60,000 பறிமுதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.