Close Menu
    What's Hot

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    இமாசல பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து..!! கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

    அமைதி ஒப்பந்தம்; “இது எளிதானதல்ல”!. டிரம்ப் சொன்னதை கவனித்தீர்களா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்!. விபத்தில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!. பொதுமக்கள் கோரிக்கை!
    தமிழ்நாடு

    காட்டுப்பன்றிகளின் அட்டகாசம்!. விபத்தில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்!. பொதுமக்கள் கோரிக்கை!

    Editor web3By Editor web3June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    wild boars kovai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை வடவள்ளி – சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக, வடவள்ளி பகுதியில் மாலை நேரங்களில் குட்டிகளுடன் வரும் காட்டுப்பன்றிகள், சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உணவிற்காகத் தேடுகின்றன. இதனால், சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    ஏற்கனவே கோவையின் புறநகர் பகுதிகளில் சிறுத்தை, புலி நடமாட்டம் மற்றும் யானைகளின் வருகை பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வடவள்ளி மக்கள் காட்டுப்பன்றிகளால் நிம்மதியை இழந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் இவை மனிதர்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பாக, வனத்துறையினர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “குறைந்தபட்சம் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வரும் காட்டுப்பன்றிகளைப் பிடிக்க பெரிய இரும்பு கூண்டுகளை அந்தந்தப் பகுதிகளில் வைக்க வேண்டும். பிடிபடும் பன்றிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட வேண்டும்” என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    Accidents kovai People panic wild boars
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு பள்ளி சமையலறையில் தீ விபத்து; பத்திரமாக மீட்கப்பட்ட 26 மாணவர்கள்
    Next Article “மக்கள் முன்னேற்றமே ஏ.ஐ. வளர்ச்சியின் இலக்கு”..!! பாரிஸில் பிரதமர் மோடி அதிரடி பேச்சு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

    June 18, 2026

    திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

    June 18, 2026

    ஆளுநர் உரை: அரசை ஆதரிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் ‘ரியாக்சன்’ என்ன?

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    இமாசல பிரதேசத்தில் பயங்கர சாலை விபத்து..!! கார் பள்ளத்தில் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

    அமைதி ஒப்பந்தம்; “இது எளிதானதல்ல”!. டிரம்ப் சொன்னதை கவனித்தீர்களா?

    செங்கல்பட்டு RTO அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை

    திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ. 1 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.