சென்னையில் இன்று பகல்நேர வெப்பநிலை குறைந்து, ஈரப்பதமான காற்று வீசுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில், சென்னைக்குக் கிழக்கே – வடகிழக்கே சுமார் 80–100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகக் கூட்டம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேகமூட்டத்தையும் ஈரப்பதத்தையும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பகல்நேர வெப்பநிலை இயல்பை விட 1–3°C குறைவாக இருக்கக்கூடும்; அதேவேளையில், வலுவான கடல் காற்று ஈரப்பதமான காற்றை நிலப்பகுதியை நோக்கி வீசச் செய்யும் எனவும்,
பரவலான கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், சென்னை உள்ளிட்ட வட கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், வானிலை அதிக மேகமூட்டத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும், சற்று குளிர்ச்சியாகவும் காணப்படுவதால் சென்னை மக்கள் ஜில்லுனு ஒரு வானிலையை அனுபவிக்கக் கூடும்.
