Close Menu
    What's Hot

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!
    Featured

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Keir Starmer resigns
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். ஆளும் தொழிற்கட்சிக்குள்ளேயே (Labour Party) அவருக்கு எதிராக எழுந்த கடுமையான உட்கட்சி நெருக்கடி மற்றும் எதிர்ப்புகள் காரணமாக அவர் இந்த தற்காலிக முடிவை எடுத்துள்ளார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ’10 டவுனிங் தெரு’ வாசலில் தனது மனைவியுடன் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ர் ஸ்டார்மர், தனது ராஜினாமா முடிவை உருக்கமாக வெளியிட்டார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    அவர் பேசுகையில், “அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் சரியான நபரா என்ற கேள்வி என் கட்சியினரிடையே எழுந்துள்ளது. நாடாளுமன்றக் குழுவின் அந்தப் பதிலுக்கு நான் தலைவணங்குகிறேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இந்த நாட்டின் நலனை மட்டுமே முன்வைத்து எடுக்கப்பட்டது. அதனால் தான் நான் தொழிற்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.”

    மேலும், இந்த முடிவை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் இன்று காலையே தெரிவித்துவிட்டதாகவும், பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றதே தனது வாழ்வின் பெருமிதமான தருணம் என்றும் அவர் கூறினார். உரையின் இறுதியில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட ஸ்டார்மர், இனி தனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் அதிக நேரத்தைச் செலவிட்டு, ஒரு நல்ல கணவனாகவும் தந்தையாகவும் இருக்கப்போவதாகக் கூறினார்.

    பிரிட்டன் பிரதமராக 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்து வந்த கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகலுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளன. மான்செஸ்டர் நகரின் முன்னாள் மேயரும், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவருமான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) கடந்த வாரம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடத் தயாரானதே இந்த மாற்றத்தின் முக்கியப் புள்ளி.

    தொழிற்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அமைச்சரவையின் முக்கியத் தலைவர்களும் ஸ்டார்மருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டு, ஆண்டி பர்ன்ஹாமுக்கு ஆதரவாக மாறினர்.

    பிரிட்டனின் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார மந்தநிலை, மக்கள் மத்தியில் சரிந்த செல்வாக்கு மற்றும் பீட்டர் மேண்டல்சன் போன்ற சில முக்கிய உயர் அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

    அதிகாரப் பகிர்வு சுமுகமாக நடப்பதை தான் உறுதி செய்யப் போவதாகவும், தனக்கு அடுத்து வரவிருக்கும் புதிய பிரதமருக்கு முழு ஆதரவு அளிப்பேன் என்றும் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார். பிரிட்டனின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் வரும் வாரங்களில் ஆளும் தொழிற்கட்சியால் தொடங்கப்படவுள்ளன.

    amid pressure Keir Starmer resigns Labour Party Prime Minister of UK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!
    Next Article விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    June 22, 2026

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    June 22, 2026

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    திருவள்ளூர் : விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு சம்பவம்..! தலா ரூ.10லட்சம் இழப்பீடு தொகை..! திருமா வேண்டுகோள்..!

    மேகதாதுவில் நடுவர் மன்றம் கோரியது ஏன்? – தங்கம் தென்னரசு விளக்கம்

    விருதுநகரில் பயங்கரம்! லாரியோடு மோதி நொறுங்கிய கார்!. உயிருக்கு போராடிய 4 பேர் மீட்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.