தமிழ்நாடு அரசு இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் 15 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றி ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற மே 10-ஆம் தேதி முதல், காவல் துறையில் அதிரடி பணியிடமாற்றங்களும், பதவி மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
கடந்த மே மாதம் 20ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரிகளான வெங்கடராமன், பவானீஸ்வரி, அவினாஷ் குமார், பிரவீன் குமார் அபிநபு உள்ளிட்ட 15 பேரும், மே 25- ஆம் தேதி அருண் ஐபிஎஸ் உள்பட 3 காவல் துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி 7 ஐபிஎஸ் அதிகாரிகள், ஜூன் 11ஆம் தேதி சென்னையில் மட்டும் ஒரே நாளில் 29 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஜூன் 15ஆம் நாள் அதிக பட்சமாக 56 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு உள்ளாகினர். ஜூன் 17ஆம் தேதி 31டி.எஸ்.பிக்களும், ஜூன் 22ஆம் தேதி 14 ஐ.பி.எஸ் அதிகாரிகளும், இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 24) காவல்துறை அதிகாரிகள் 15 பேரை இடமாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்படி, தாம்பரம் தலைமையிட துணை கமிஷனராக கண்ணன், நவீன மயமாக்கல் பிரிவு எஸ்பியாக வேல்முருகன், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக ஸ்டாலின், ரமேஷ் பாபு- தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பி, கீதாஞ்சலி – பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் மற்றும்.சுந்தரவடிவேல்- பெருநகர சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பூர் வடக்கு துணை கமிஷனராக ரமேஷ் கிருஷ்ணன், ஆவடி துணை கமிஷனராக மகேஷ்வரி, திருவண்ணாமலை எஸ்பியாக உதயகுமார், அடையாறு துணை கமிஷனராக கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குணால் உத்தம் ஷ்ரோட் – கோயம்பேடு துணை கமிஷனர், ஆகாஷ் ஜோஷி- திருப்பூர் தெற்கு துணை கமிஷனர், அன்சுல் நாகர்- நெல்லை மேற்கு துணை கமிஷனர், அர்பிடா ராஜ்புத்-சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்பி மற்றும் பனவத் அரவிந்த்- திருச்சி வடக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளனர்.
ஏஎஸ்பிக்கள் 5 பேர் எஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்
