நடிப்பின் உச்சகட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர். அவர் சட்டப்பேரவையில் நடிக்க வேண்டிய அவசியம் எப்போது இல்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் சட்டசபையில் நடிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
முதலமைச்சர் என்றைக்கும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நடிப்பிலே உச்சக்கட்டத்தில் இருந்து விட்டு அரசியலுக்கு வந்தவர். நாட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார். அவரின் ஒவ்வொரு பதிலையும் கேட்டார்கள்.
முதலில் அவர் ஏன் பேசாமல் இருக்கிறார் எனக் கேட்டார்கள். அவர் பேச்சைக்கேட்ட பிறகு தி.மு.க.திணறிப் போய் வெளியே சென்றது எனத் தெரிவித்தார்.
